• May 21 2024

தற்கொலைதாரிகளின் மரணத்தை ஊக்குவித்தவர்களை காப்பாற்றும் முயற்சியே அஷாட் மௌலானாவின் சாட்சியம்! சபையில் பிள்ளையான் samugammedia

Chithra / Sep 6th 2023, 12:47 pm
image

Advertisement

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். 

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே சிவநேசத்துறை சந்திரக்காந்தன் இதனை தெரிவித்தார். 

உயித்தஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்குதல் சம்பவமாகும். 

குறித்த குண்டுத்தாக்குதலை ஐ எஸ் அமைப்பினரே மேற்கொண்டனர் என அதன் தலைவர் தெரிவித்திருந்தார். 

ஐ எஸ் அமைப்பின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் அவர்கள் உரிமை கோரியிருந்தனர். 

தற்கொலை குண்டுத்தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பிலும் எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பது தொடர்பிலும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும் அசாத் மௌலானா வெளிநாட்டில் தஞ்சம் கோருவதற்காக இதனை மறுபக்கம் திருப்புவதற்கு முயற்சிப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

 மதத்திற்காக மரணிப்போம் என சத்தியபிரமாணம் செய்த சிலர் சிறையிலும் வெளியிலும் இருக்கின்றார்கள். 

 அவர்களை மரணிப்பதற்கு ஊக்குவித்த சில மதநிறுவனங்களும், அரசியல் சக்திகள், மற்றும் சர்வதேச சக்திகள் காணப்படுகின்றன. 

 இதனை காப்பாற்றுவதற்கான அசாத் மௌலான மேற்கொண்டுள்ள பலத்த முயற்சியே செனல் 4 நிறுவனத்திற்கான சாட்சியமளிப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

தற்கொலைதாரிகளின் மரணத்தை ஊக்குவித்தவர்களை காப்பாற்றும் முயற்சியே அஷாட் மௌலானாவின் சாட்சியம் சபையில் பிள்ளையான் samugammedia குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே சிவநேசத்துறை சந்திரக்காந்தன் இதனை தெரிவித்தார். உயித்தஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்குதல் சம்பவமாகும். குறித்த குண்டுத்தாக்குதலை ஐ எஸ் அமைப்பினரே மேற்கொண்டனர் என அதன் தலைவர் தெரிவித்திருந்தார். ஐ எஸ் அமைப்பின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் அவர்கள் உரிமை கோரியிருந்தனர். தற்கொலை குண்டுத்தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பிலும் எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பது தொடர்பிலும் அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் அசாத் மௌலானா வெளிநாட்டில் தஞ்சம் கோருவதற்காக இதனை மறுபக்கம் திருப்புவதற்கு முயற்சிப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  மதத்திற்காக மரணிப்போம் என சத்தியபிரமாணம் செய்த சிலர் சிறையிலும் வெளியிலும் இருக்கின்றார்கள்.  அவர்களை மரணிப்பதற்கு ஊக்குவித்த சில மதநிறுவனங்களும், அரசியல் சக்திகள், மற்றும் சர்வதேச சக்திகள் காணப்படுகின்றன.  இதனை காப்பாற்றுவதற்கான அசாத் மௌலான மேற்கொண்டுள்ள பலத்த முயற்சியே செனல் 4 நிறுவனத்திற்கான சாட்சியமளிப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement