• Nov 25 2024

6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் அஸ்வெசும நிவாரணம் - ஜனாதிபதி ரணில்

Chithra / Sep 1st 2024, 8:46 am
image

 

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நிவாரணம் கிடைக்கப்பெறாதவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குவதற்காக அஸ்வெசும நிவாரணம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படும்.

சிலர் வரிகளைக் குறைப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறு செய்வதால் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் அனைத்து நிதிகளும் நிறுத்தப்படும்.

அதன் பின்னர் நாடு 2022 ஆம் ஆண்டை விடவும் மோசமான நிலைக்குச் செல்ல நேரிடும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதேநேரம், எல்ல மற்றும் பண்டாரவளையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் பிரதேசமாக பண்டாரவளையை மாற்றுவதற்கான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் அஸ்வெசும நிவாரணம் - ஜனாதிபதி ரணில்  குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பண்டாரவளையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.நிவாரணம் கிடைக்கப்பெறாதவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குவதற்காக அஸ்வெசும நிவாரணம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படும்.சிலர் வரிகளைக் குறைப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறு செய்வதால் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் அனைத்து நிதிகளும் நிறுத்தப்படும்.அதன் பின்னர் நாடு 2022 ஆம் ஆண்டை விடவும் மோசமான நிலைக்குச் செல்ல நேரிடும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.அதேநேரம், எல்ல மற்றும் பண்டாரவளையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.அத்துடன், சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் பிரதேசமாக பண்டாரவளையை மாற்றுவதற்கான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement