• May 04 2024

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 8 பில்லியன் ரூபாய் நிதி விவசாயிகளுக்கு!

Chithra / Dec 29th 2022, 10:13 am
image

Advertisement

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ள 08 பில்லியன் ரூபாய் நிதியை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கும் நிகழ்வு உத்தியோகபூர்வமாக இடம்பெறவுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் விவசாய அமைச்சில் இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளது.

கடந்த பெரும்போக அறுவடையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 08 பில்லியன் ரூபாய் நிதி உதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, ஒரு ஹெக்டேயர் வயல் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்காக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் 02 ஹெக்டேயர் வயல் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்காக 20 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 8 பில்லியன் ரூபாய் நிதி விவசாயிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ள 08 பில்லியன் ரூபாய் நிதியை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கும் நிகழ்வு உத்தியோகபூர்வமாக இடம்பெறவுள்ளது.விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் விவசாய அமைச்சில் இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளது.கடந்த பெரும்போக அறுவடையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 08 பில்லியன் ரூபாய் நிதி உதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, ஒரு ஹெக்டேயர் வயல் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்காக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் 02 ஹெக்டேயர் வயல் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்காக 20 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement