இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட, முக்கியமான சட்ட சீர்திருத்தங்களை உடனடியாக செயற்படுத்த வேண்டுமென்று, ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வலியுறுத்தியுள்ளது.
எழுத்துப்பூர்வ முறையீடு ஒன்றின் ஊடாக, ஆணையகத்தின் கொள்கை மற்றும் திட்டங்களின் இயக்குநர் பசில் பெர்னாண்டோ இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
நாட்டின் சட்ட மற்றும் நீதி அமைப்புகளில் உள்ள முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அவசரத் தேவையை அவர் அந்த முறையீட்டில் வலியுறுத்தியுள்ளார்.
உடனடி சீர்திருத்தம் தேவைப்படும் மூன்று முக்கியமான பகுதிகளை ஏற்கனவே ஆணையகம் அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,
நீதித்துறை செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் நீதி வழங்குவதில் தாமதங்களைக் குறைப்பதற்கும், மேல் நீதிமன்றங்களில் கடுமையான குற்றவியல் வழக்குகளின் பிற்போடப்படாத நாளாந்த விசாரணையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை கோரியுள்ளார்.
இந்நிலையில், லஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராட விரிவான சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என்று கோரியுள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணையகம், இது ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறலில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட, முக்கியமான சட்ட சீர்திருத்தங்களை உடனடியாக செயற்படுத்த வேண்டுமென்று, ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வலியுறுத்தியுள்ளது.எழுத்துப்பூர்வ முறையீடு ஒன்றின் ஊடாக, ஆணையகத்தின் கொள்கை மற்றும் திட்டங்களின் இயக்குநர் பசில் பெர்னாண்டோ இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.நாட்டின் சட்ட மற்றும் நீதி அமைப்புகளில் உள்ள முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அவசரத் தேவையை அவர் அந்த முறையீட்டில் வலியுறுத்தியுள்ளார்.உடனடி சீர்திருத்தம் தேவைப்படும் மூன்று முக்கியமான பகுதிகளை ஏற்கனவே ஆணையகம் அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், நீதித்துறை செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் நீதி வழங்குவதில் தாமதங்களைக் குறைப்பதற்கும், மேல் நீதிமன்றங்களில் கடுமையான குற்றவியல் வழக்குகளின் பிற்போடப்படாத நாளாந்த விசாரணையை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை கோரியுள்ளார்.இந்நிலையில், லஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராட விரிவான சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என்று கோரியுள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணையகம், இது ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறலில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.