• May 04 2024

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் வெள்ளம்- 135 பேர் பலி..!!

Tamil nila / Apr 20th 2024, 8:01 pm
image

Advertisement

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில்  கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது .இதனால் 135 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழையால் நாடு முழுவதும் 2,715 வீடுகள் சேதமடைந்துள்ளன. கட்டுமான இடிபாடுகள், மின்னல் தாக்கம் மற்றும் திடீர் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பெரும்பாலான மக்கள் இறந்ததாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கானோரின் தமது குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப்பில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்த 21 விவசாயிகள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வரும் ஏப்ரல் 22 வரை தொடர்ந்து மழை நீடிக்கும் என்று கணித்துள்ளது. மேலும், எதிர்பார்க்கப்படும் மழை நாட்டின் பல பகுதிகளில் திடீர் வெள்ளத்தைத் தூண்டக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் வெள்ளம்- 135 பேர் பலி. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில்  கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது .இதனால் 135 பேர் உயிரிழந்துள்ளனர்.மழையால் நாடு முழுவதும் 2,715 வீடுகள் சேதமடைந்துள்ளன. கட்டுமான இடிபாடுகள், மின்னல் தாக்கம் மற்றும் திடீர் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பெரும்பாலான மக்கள் இறந்ததாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.ஆயிரக்கணக்கானோரின் தமது குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.பஞ்சாப்பில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்த 21 விவசாயிகள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.முன்னதாக நேற்று வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வரும் ஏப்ரல் 22 வரை தொடர்ந்து மழை நீடிக்கும் என்று கணித்துள்ளது. மேலும், எதிர்பார்க்கப்படும் மழை நாட்டின் பல பகுதிகளில் திடீர் வெள்ளத்தைத் தூண்டக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement