• Sep 17 2024

பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 19 பேர் காயம்!

Chithra / Aug 15th 2024, 12:54 pm
image

Advertisement

 

அநுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியில் சிராவஸ்திபுர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (15) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் பயணித்த பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை பஸ் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, பாடசாலை பஸ்ஸில் பயணித்த 4 மாணவர்களும் பஸ் சாரதியும் ஆடை தொழிற்சாலையின் பஸ்ஸில் பயணித்த 14 பெண்களும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஆடை தொழிற்சாலையின் பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 19 பேர் காயம்  அநுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியில் சிராவஸ்திபுர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து இன்று (15) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் பயணித்த பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை பஸ் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தின் போது, பாடசாலை பஸ்ஸில் பயணித்த 4 மாணவர்களும் பஸ் சாரதியும் ஆடை தொழிற்சாலையின் பஸ்ஸில் பயணித்த 14 பெண்களும் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து, ஆடை தொழிற்சாலையின் பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement