• Jun 16 2024

நைஜீரியா – கிராமமொன்றில் புகுந்து தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய கும்பல்கள் - 40 பேர் பலி..!!

Tamil nila / May 22nd 2024, 7:09 pm
image

Advertisement

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட-மத்திய பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் அடிக்கடி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

வேஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் நள்ளிரவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கும்பல் புகுந்தது. அவர்கள் வாசின் ஜுராக் சமூகத்தில் உள்ள கிராம மக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 40 பேர் உயிரிழந்தனர்.  பலர் காயம் அடைந்தனர்.

பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்து பொலிஸார் அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இந்த பிராந்தியத்தில் நாடோடி மேய்ப்பர்கள்-கிராம விவசாயிகளுக்கு இடையே நீர், நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இதில் இருதரப்புக்கு மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்களும் நடந்தன.


நைஜீரியா – கிராமமொன்றில் புகுந்து தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய கும்பல்கள் - 40 பேர் பலி. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட-மத்திய பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் அடிக்கடி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.வேஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் நள்ளிரவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கும்பல் புகுந்தது. அவர்கள் வாசின் ஜுராக் சமூகத்தில் உள்ள கிராம மக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 40 பேர் உயிரிழந்தனர்.  பலர் காயம் அடைந்தனர்.பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்து பொலிஸார் அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இந்த பிராந்தியத்தில் நாடோடி மேய்ப்பர்கள்-கிராம விவசாயிகளுக்கு இடையே நீர், நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இதில் இருதரப்புக்கு மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்களும் நடந்தன.

Advertisement

Advertisement

Advertisement