• May 03 2024

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு...! நோயாளர்கள் அவதி...!

Sharmi / Apr 2nd 2024, 3:59 pm
image

Advertisement

சம்பள உயர்வை  வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்

அந்த வகையில், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த 180 வரையான சிற்றூழியர்களும் பணி புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை 6:30 மணி தொடக்கம் 10 மணி வரை பணிபுறக்கணிப்பு  போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,  குறித்த நேரப் பகுதியில் மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளார்கள்.

இது குறித்து தொழிற்சங்கங்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

ஸ்ரீலங்கா ஜனராஜா சுகாதார சேவைகள் ஒன்றியம் சுகாதார துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவொன்றிற்கு மாத்திரம் பொருளாதார நீதியினை நிறைவேற்றும் அநீதியான தீர்மானத்திற்கு எதிராக 2024.04.02 ஆம் திகதி எடுக்கப்படும் தொழிற் சங்க நடவடிக்கைகள் தொடர்பாக அறிவுறுத்தல்.

அமைச்சரவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவொன்றிற்கு மாத்திரம் பொருளாதார நீதிக்காக வழங்கப்பட்ட ரூபா.35,000/- கொடுப்பனவினை சுகாதார துறையில் மற்றைய ஊழியர்களுக்கும் சமனாக வழங்குமாறு வலியுறுத்தி 2024.01.11 ஆம் திகதி 72 தொழிற் சங்கங்களின் அங்கத்தவர்கள் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், இதுவரையில் அதற்கு தீர்வு பெற்றுத்தர உரிய அதிகாரிகளுக்கு முடியாமல் போயுள்ளதனை மனவருத்தத்துடன் சுட்டிக் காட்டுகின்றோம்.

சுகாதார துறையில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்களை இந் நிலைமையின் மத்தியில் பாரிய விதத்தில் கருத்திற் கொள்ளாமையின் காரணத்தினால் ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராக 2024.04.02 ஆம் திகதி மு.ப.6.30 மணியிலிருந்து தொடர்ச்சியாக 72 தொழிற் சங்கங்களின் பங்களிப்புடன் அனைத்து ஊழியர்களும் மீண்டும் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதனை இங்கு தெரிவித்துக் கொள்வதோடு, தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வினை பெற்றுத் தருமாறு மிகவும் தேவைப்பாட்டுடன் தெரிவித்துள்ளார்கள் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த போராட்டம் யாழ் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றது.

அதற்கமைய, இன்று(02) காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இன்று காலை இலங்கையில் உள்ள பத்து வைத்தியசாலைகளில் 72 தொழிற்சங்கள் இணைந்து 4 மணித்தியாலங்களுக்கு சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

இதன்கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வைத்தியசாலையில் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியசாலையில் கடமையில் உள்ள பல்வேறு பிரிவினரும் நான்கு மணி நேரம் கடமைக்கு செல்லாமல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.

இன்றைய தினம் தமது நியாயமான கோரிக்கைக்கு சாதகமான பதில்கள் வழங்காவிட்டால் நாளை முதல் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன்காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு சுகாதார அமைச்சும் அரசாங்கமுமே பொறுப்பேற்கவேண்டும் எனவும் இங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த போராட்டங்கள் காரணமாக நீண்டதூரத்திலிருந்து கிளினிக் மற்றும் சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்கள் மருந்துகளைப்பெறுவதற்கு நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய சூழ்நிலையேற்பட்டது.

தற்போது நோன்பு காலம் என்ற காரணத்தினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டதாக நோயாளர்கள் தெரிவித்தனர்.


கிளிநொச்சி பொது வைத்தியசாலை


பொது சுகாதார பரிசோதகர்கள், இரசாயன ஆய்வுகூட பணியாளர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோர் பொருளாதார நீதி கோரி கிளிநொச்சியில் இன்று 4 மணித்தியாலயம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

அந்த வகையில் இன்று(02.04.2024) காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் நியாயத்தை வழங்குமாறு கோரி கிளிநொச்சி பொது வைத்தியசாலை முன்பாக  அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.




சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு. நோயாளர்கள் அவதி. சம்பள உயர்வை  வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்அந்த வகையில், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த 180 வரையான சிற்றூழியர்களும் பணி புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை 6:30 மணி தொடக்கம் 10 மணி வரை பணிபுறக்கணிப்பு  போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,  குறித்த நேரப் பகுதியில் மருத்துவமனைக்கு சென்ற நோயாளிகள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளார்கள்.இது குறித்து தொழிற்சங்கங்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,ஸ்ரீலங்கா ஜனராஜா சுகாதார சேவைகள் ஒன்றியம் சுகாதார துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவொன்றிற்கு மாத்திரம் பொருளாதார நீதியினை நிறைவேற்றும் அநீதியான தீர்மானத்திற்கு எதிராக 2024.04.02 ஆம் திகதி எடுக்கப்படும் தொழிற் சங்க நடவடிக்கைகள் தொடர்பாக அறிவுறுத்தல்.அமைச்சரவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவொன்றிற்கு மாத்திரம் பொருளாதார நீதிக்காக வழங்கப்பட்ட ரூபா.35,000/- கொடுப்பனவினை சுகாதார துறையில் மற்றைய ஊழியர்களுக்கும் சமனாக வழங்குமாறு வலியுறுத்தி 2024.01.11 ஆம் திகதி 72 தொழிற் சங்கங்களின் அங்கத்தவர்கள் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், இதுவரையில் அதற்கு தீர்வு பெற்றுத்தர உரிய அதிகாரிகளுக்கு முடியாமல் போயுள்ளதனை மனவருத்தத்துடன் சுட்டிக் காட்டுகின்றோம்.சுகாதார துறையில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்களை இந் நிலைமையின் மத்தியில் பாரிய விதத்தில் கருத்திற் கொள்ளாமையின் காரணத்தினால் ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராக 2024.04.02 ஆம் திகதி மு.ப.6.30 மணியிலிருந்து தொடர்ச்சியாக 72 தொழிற் சங்கங்களின் பங்களிப்புடன் அனைத்து ஊழியர்களும் மீண்டும் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதனை இங்கு தெரிவித்துக் கொள்வதோடு, தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வினை பெற்றுத் தருமாறு மிகவும் தேவைப்பாட்டுடன் தெரிவித்துள்ளார்கள் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேவேளை குறித்த போராட்டம் யாழ் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றது.அதற்கமைய, இன்று(02) காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைசுகாதார தொழிற்சங்கங்கள் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.இன்று காலை இலங்கையில் உள்ள பத்து வைத்தியசாலைகளில் 72 தொழிற்சங்கள் இணைந்து 4 மணித்தியாலங்களுக்கு சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று ஈடுபட்டிருந்தனர்.இதன்கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வைத்தியசாலையில் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.வைத்தியசாலையில் கடமையில் உள்ள பல்வேறு பிரிவினரும் நான்கு மணி நேரம் கடமைக்கு செல்லாமல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.இன்றைய தினம் தமது நியாயமான கோரிக்கைக்கு சாதகமான பதில்கள் வழங்காவிட்டால் நாளை முதல் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன்காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு சுகாதார அமைச்சும் அரசாங்கமுமே பொறுப்பேற்கவேண்டும் எனவும் இங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.இந்த போராட்டங்கள் காரணமாக நீண்டதூரத்திலிருந்து கிளினிக் மற்றும் சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்கள் மருந்துகளைப்பெறுவதற்கு நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய சூழ்நிலையேற்பட்டது.தற்போது நோன்பு காலம் என்ற காரணத்தினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டதாக நோயாளர்கள் தெரிவித்தனர்.கிளிநொச்சி பொது வைத்தியசாலைபொது சுகாதார பரிசோதகர்கள், இரசாயன ஆய்வுகூட பணியாளர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோர் பொருளாதார நீதி கோரி கிளிநொச்சியில் இன்று 4 மணித்தியாலயம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று(02.04.2024) காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் நியாயத்தை வழங்குமாறு கோரி கிளிநொச்சி பொது வைத்தியசாலை முன்பாக  அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement