• Apr 26 2026

பாகிஸ்தானிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல்! திரண்ட போராட்டக்காரர்கள்!

Chithra / Mar 1st 2026, 2:02 pm
image

 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் ஈரானின் உச்சத் தலைவர் கமேனியின் படுகொலை ஆகியவற்றைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. 


இதன் பின்னணியில், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வெளியே பெருமளவிலான போராட்டக்காரர்கள் திரண்டனர். 


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மைக்கு வாஷிங்டன் காரணம் என குற்றம் சாட்டியதுடன், வெளிநாட்டு இராணுவ தலையீடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.


இதன்போது தூதரகத்தின் மீது போராட்டக்காரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. 


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரான் அரசியல் மற்றும் ஆயுதக் குழுக்களின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். 


அதேவேளை, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பரந்த அளவிலான எதிர்ப்பும் வெளிப்பட்டது.


இதற்கிடையில், வெளிநாட்டு தூதரகங்களும் முக்கிய அரச கட்டிடங்களும் அமைந்துள்ள கடுமையாக பாதுகாக்கப்படும் ‘கிரீன் சோன்’ பகுதிக்குள் நுழைய முயன்ற மக்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பையும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.


பாகிஸ்தானிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் திரண்ட போராட்டக்காரர்கள்  அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் ஈரானின் உச்சத் தலைவர் கமேனியின் படுகொலை ஆகியவற்றைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வெளியே பெருமளவிலான போராட்டக்காரர்கள் திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மைக்கு வாஷிங்டன் காரணம் என குற்றம் சாட்டியதுடன், வெளிநாட்டு இராணுவ தலையீடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.இதன்போது தூதரகத்தின் மீது போராட்டக்காரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரான் அரசியல் மற்றும் ஆயுதக் குழுக்களின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். அதேவேளை, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பரந்த அளவிலான எதிர்ப்பும் வெளிப்பட்டது.இதற்கிடையில், வெளிநாட்டு தூதரகங்களும் முக்கிய அரச கட்டிடங்களும் அமைந்துள்ள கடுமையாக பாதுகாக்கப்படும் ‘கிரீன் சோன்’ பகுதிக்குள் நுழைய முயன்ற மக்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பையும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement