• Sep 20 2024

போலிச் செய்திகளை பரப்பி பல்கலைக்கழக நிர்வாகத்தை சீர்குலைக்க முயற்சி - உபவேந்தர் றமீஸ் தெரிவிப்பு samugammedia

Chithra / Jun 29th 2023, 5:00 pm
image

Advertisement

சமூக ஊடகங்கள் தொடர்பான முறையான கட்டுப்பாடுகள் இல்லாததனால் யாரும் எதனையும் பேசலாம், எதனையும் எழுதலாம் என்ற நிலை உருவாகியுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (29) மாலை அண்மைக்காலமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் தொடர்பான வெளிவரும்  விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முகமாக விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,

உபவேந்தரினைத் தெரிவு செய்வதற்கு இரண்டு வகையான புள்ளியிடல் முறை காணப்படுகிறது. முதலாவது புள்ளியிடல் UGC ஆல் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்படுவது. இக்குழு UGC ஆல் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் மூதவை நியமன உறுப்பினர்களையும் கொண்டது. இக்குழு அரசியல் செல்வாக்கற்ற சுயாதீனமானவர்களைக் கொண்டது. இரண்டாவது புள்ளியிடல் முறை பேரவை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுவது. முதலாவது புள்ளியிடல் முறையில் நான் அதிக புள்ளிகளுடன் முதலிடம் பெற்றேன்.

இரண்டாவது புள்ளியிடலில் சில பேரவை உறுப்பினர்கள் எனக்குப் புள்ளிகளைக் குறைத்து வழங்கினர். அதனால் இரண்டாவது புள்ளியிடலில் மிகச் சிறிய புள்ளி வித்தியாசத்தில் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

இரு வகைப் புள்ளியிடலிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களது விபரம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். மூவரில் எவரையேனும் உபவேந்தராக நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு முழு அதிகாரமுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட மூவருள் நான் மட்டுமே பேராசிரியராக இருந்தேன். ஏனைய இருவரும் சிரேஷ்ட விரிவுரையாளர்களே. பதவி நிலை, புள்ளிகள் அடிப்படையில் நான் முன்னிலை வகித்தேன். அதனால் ஜனாதிபதி என்னை உபவேந்தராக நியமனம் செய்தார்.

நான் உபவேந்தராக நியமிக்கப்படுவதற்கு முன்னரும் பல கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. உபவேந்தராக நியமிக்கப்பட்டு பதவியினை பொறுப்பேற்பதற்கு குறிப்பிட்டகாலம் தாமதிக்க வேண்டியிருந்ததது. 

இடைக்காலத்தில் எனது நியமனத்தினை இரத்துச் செய்வதற்கு சில குழுவினர் பகீரத முயற்சி எடுத்தனர். எனக்கெதிராக நூற்றுக்கணக்காண பெட்டிசன்கள் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.

அவர்களது பெட்டிசன்களில் உண்மையில்லாததன் காரணமாக அதிகாரிகள் அதனைக் கருத்திற்கொள்ளவில்லை. 

இருப்பினும் அவர்களால் எனது பதவியினை இரத்துச் செய்ய முடியவில்லை. பதவியிலிருந்த உபவேந்தரின் பதவிக்காலம் முடிவுற்றதும் நான் பதவியினைப் பொறுப்பேற்றேன். பதவியேற்றதும் பல்கலைக்கழகத்தினை பல்வேறு வழிகளிலும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்தேன். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் எனது நிருவாகத்திற்கு முழு ஆதரவினை வழங்கினர்.

பதவியேற்றதும் பல்கலைக்கழக ஆளணியினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருந்த பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. மிகவும் வெளிப்படைத்தன்மையான முறையில் நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன. 

நேர்முகத் தேர்வில் தோல்வியுற்ற பலர் எனக்கெதிராக சமூக ஊடகத்தில் விமர்சனங்களை தொடுக்க ஆரம்பித்தனர். பல்கலைக்கழக நிருவாகத்தினை ஒழுங்குபடுத்துவதற்கும் நான் நடவடிக்கை எடுத்தேன். சில விரிவுரையாளர்களது ஒழுக்காற்று விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

படிப்பினை உரிய காலத்திற்குள் நிறைவு செய்யாதவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னர் சட்டப்படி இராஜினாமாச் செய்தவர்கள் மீண்டும் முறைகேடாக பல்கலைக்கழகத்திற்கு நுழைவதற்கும் முயற்சித்தனர். 

அத்தகையவர்கள் தொடர்பில் சட்டத்திற்குப் புறம்பாக என்னால் அவர்களை இணைக்க முடியவில்லை. இத்தகையவர்கள் என்னைப் பற்றியும் எனது நிருவாகம் பற்றியும் போலித் தகவல்களை வழங்கிவருகின்றனர்.

தொடர்ச்சியான பெட்டிசன்களை அனுப்பி அதிகாரிகளுக்கு நெருக்கடிகளைத் தோற்றுவிக்கின்றனர்.

சமூக ஊடகங்களினூடாக எனக்கெதிராக போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

சில ஊடகங்களில் தமது செல்வாக்கினைப் பயன்படுத்தி போலிச் செய்திகளை பிரசுரிக்கின்றனர். நான் பதவியேற்றது முதல் இந்தத் தரப்பினர் நாசகார செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது ஒவ்வொரு முயற்சியும் முறைகேடானது என்பதால் அவை முறியறிக்கப்பட்டன. 

உயர் அதிகாரிகளிடம் தமது தொடர்பினை பயன்படுத்தி இவர்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். சட்ட ரீதியாக எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த நியாயமான காரணங்களும் இல்லை. அதனால் எனக்கெதிராக எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளேன். சில சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் என்னை அகற்ற முயற்சி எடுக்கப்பட்டது. 

அதற்கு இசைவாக ஊடகச் செய்திகளும் இந்த நாசகாரச் குழுவினால் வெளியிடப்பட்டது. பல்கலைக்கழக உபவேந்தரினை சட்டரீதியாக அகற்றுவதற்கு ஒரு முறை இருக்கிறது. பல்கலைக்கழக நிருவாகம் சீர்குலைந்திருந்தால் மட்டுமே அதனைச் செய்யமுடியும்.

ஆனால் எமது பல்கலைக்கழகம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

விரிவுரையாளர்களும் நிருவாகிகளும் மாணவர்களும் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றனர். பல்கலைக்கழக கல்வி மற்றும் இதர நடவடிக்கைகளுக்கு எந்தப் பங்கமும் இடம்பெறவில்லை. 

எந்தவொரு மாணவர் எதிர்ப்பும் பல்கலைக்கழக நிருவாகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட வில்லை.

மொத்தத்தில் பல்கலைக்கழக நிருவாகம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சீர்குலையவில்லை.

இந்நிலையில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்மீது சுமத்தப்பட்டு வருகின்றது.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படையும் இல்லை. இவ்வளவு காலமும் நான் பொறுமையாக இருந்தேன்.

இக்குற்றச்சாட்டுக்களை சட்ட ரீதியாக அனுகுவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். சமூக ஊடகத்தினை தவறாகக் கையாளும் குழுவினர் போலிச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

எமது பல்கலைக்கழகத்தினைப் பொறுத்த வரையில் இந்த விடயம் நீண்டகாலமாக இடம்பெற்று வருகிறது. இந்தத் தரப்பினர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் நாஜிம் அவர்களது நிருவாகத்தினைக் சீர்குலைக்க சதிசெய்தனர். ஊடக மாநாடுகளை நடத்தினர், அரசியல்வாதிகளைச் சந்தித்தனர். நாசகார வேலைகளில் ஈடுபட்டனர்.

இத்தகைய நாசகார வேலைகளில் ஈடுபடுவது இவர்களது வழக்கமாக இருந்து வருகிறது. இவர்கள் தமது கடமைப் பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றுவதில்லை. உரிய காலங்களுக்குள் தமது பட்டங்களை முடிப்பதில்லை. இந்தத் தரப்பின் நடவடிக்கைகளுக்கு ஒரு சில நிருவாகிகளும் ஊழியர்களும் துணைபுரிகின்றனர். பல்கலைக்கழகத்தினை ஒரு பதட்ட நிலையில் வைத்திருப்பதனை இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆனால் இவர்களது இந்த நாசகாரச் செயல்களுக்கு நான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.- என்றார்.


போலிச் செய்திகளை பரப்பி பல்கலைக்கழக நிர்வாகத்தை சீர்குலைக்க முயற்சி - உபவேந்தர் றமீஸ் தெரிவிப்பு samugammedia சமூக ஊடகங்கள் தொடர்பான முறையான கட்டுப்பாடுகள் இல்லாததனால் யாரும் எதனையும் பேசலாம், எதனையும் எழுதலாம் என்ற நிலை உருவாகியுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.புதன்கிழமை (29) மாலை அண்மைக்காலமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் தொடர்பான வெளிவரும்  விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முகமாக விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,உபவேந்தரினைத் தெரிவு செய்வதற்கு இரண்டு வகையான புள்ளியிடல் முறை காணப்படுகிறது. முதலாவது புள்ளியிடல் UGC ஆல் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்படுவது. இக்குழு UGC ஆல் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் மூதவை நியமன உறுப்பினர்களையும் கொண்டது. இக்குழு அரசியல் செல்வாக்கற்ற சுயாதீனமானவர்களைக் கொண்டது. இரண்டாவது புள்ளியிடல் முறை பேரவை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுவது. முதலாவது புள்ளியிடல் முறையில் நான் அதிக புள்ளிகளுடன் முதலிடம் பெற்றேன்.இரண்டாவது புள்ளியிடலில் சில பேரவை உறுப்பினர்கள் எனக்குப் புள்ளிகளைக் குறைத்து வழங்கினர். அதனால் இரண்டாவது புள்ளியிடலில் மிகச் சிறிய புள்ளி வித்தியாசத்தில் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.இரு வகைப் புள்ளியிடலிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களது விபரம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். மூவரில் எவரையேனும் உபவேந்தராக நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு முழு அதிகாரமுள்ளது.பரிந்துரைக்கப்பட்ட மூவருள் நான் மட்டுமே பேராசிரியராக இருந்தேன். ஏனைய இருவரும் சிரேஷ்ட விரிவுரையாளர்களே. பதவி நிலை, புள்ளிகள் அடிப்படையில் நான் முன்னிலை வகித்தேன். அதனால் ஜனாதிபதி என்னை உபவேந்தராக நியமனம் செய்தார்.நான் உபவேந்தராக நியமிக்கப்படுவதற்கு முன்னரும் பல கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. உபவேந்தராக நியமிக்கப்பட்டு பதவியினை பொறுப்பேற்பதற்கு குறிப்பிட்டகாலம் தாமதிக்க வேண்டியிருந்ததது. இடைக்காலத்தில் எனது நியமனத்தினை இரத்துச் செய்வதற்கு சில குழுவினர் பகீரத முயற்சி எடுத்தனர். எனக்கெதிராக நூற்றுக்கணக்காண பெட்டிசன்கள் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.அவர்களது பெட்டிசன்களில் உண்மையில்லாததன் காரணமாக அதிகாரிகள் அதனைக் கருத்திற்கொள்ளவில்லை. இருப்பினும் அவர்களால் எனது பதவியினை இரத்துச் செய்ய முடியவில்லை. பதவியிலிருந்த உபவேந்தரின் பதவிக்காலம் முடிவுற்றதும் நான் பதவியினைப் பொறுப்பேற்றேன். பதவியேற்றதும் பல்கலைக்கழகத்தினை பல்வேறு வழிகளிலும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்தேன். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் எனது நிருவாகத்திற்கு முழு ஆதரவினை வழங்கினர்.பதவியேற்றதும் பல்கலைக்கழக ஆளணியினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருந்த பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. மிகவும் வெளிப்படைத்தன்மையான முறையில் நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன. நேர்முகத் தேர்வில் தோல்வியுற்ற பலர் எனக்கெதிராக சமூக ஊடகத்தில் விமர்சனங்களை தொடுக்க ஆரம்பித்தனர். பல்கலைக்கழக நிருவாகத்தினை ஒழுங்குபடுத்துவதற்கும் நான் நடவடிக்கை எடுத்தேன். சில விரிவுரையாளர்களது ஒழுக்காற்று விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.படிப்பினை உரிய காலத்திற்குள் நிறைவு செய்யாதவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னர் சட்டப்படி இராஜினாமாச் செய்தவர்கள் மீண்டும் முறைகேடாக பல்கலைக்கழகத்திற்கு நுழைவதற்கும் முயற்சித்தனர். அத்தகையவர்கள் தொடர்பில் சட்டத்திற்குப் புறம்பாக என்னால் அவர்களை இணைக்க முடியவில்லை. இத்தகையவர்கள் என்னைப் பற்றியும் எனது நிருவாகம் பற்றியும் போலித் தகவல்களை வழங்கிவருகின்றனர்.தொடர்ச்சியான பெட்டிசன்களை அனுப்பி அதிகாரிகளுக்கு நெருக்கடிகளைத் தோற்றுவிக்கின்றனர்.சமூக ஊடகங்களினூடாக எனக்கெதிராக போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சில ஊடகங்களில் தமது செல்வாக்கினைப் பயன்படுத்தி போலிச் செய்திகளை பிரசுரிக்கின்றனர். நான் பதவியேற்றது முதல் இந்தத் தரப்பினர் நாசகார செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது ஒவ்வொரு முயற்சியும் முறைகேடானது என்பதால் அவை முறியறிக்கப்பட்டன. உயர் அதிகாரிகளிடம் தமது தொடர்பினை பயன்படுத்தி இவர்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். சட்ட ரீதியாக எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த நியாயமான காரணங்களும் இல்லை. அதனால் எனக்கெதிராக எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளேன். சில சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் என்னை அகற்ற முயற்சி எடுக்கப்பட்டது. அதற்கு இசைவாக ஊடகச் செய்திகளும் இந்த நாசகாரச் குழுவினால் வெளியிடப்பட்டது. பல்கலைக்கழக உபவேந்தரினை சட்டரீதியாக அகற்றுவதற்கு ஒரு முறை இருக்கிறது. பல்கலைக்கழக நிருவாகம் சீர்குலைந்திருந்தால் மட்டுமே அதனைச் செய்யமுடியும்.ஆனால் எமது பல்கலைக்கழகம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.விரிவுரையாளர்களும் நிருவாகிகளும் மாணவர்களும் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றனர். பல்கலைக்கழக கல்வி மற்றும் இதர நடவடிக்கைகளுக்கு எந்தப் பங்கமும் இடம்பெறவில்லை. எந்தவொரு மாணவர் எதிர்ப்பும் பல்கலைக்கழக நிருவாகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட வில்லை.மொத்தத்தில் பல்கலைக்கழக நிருவாகம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சீர்குலையவில்லை.இந்நிலையில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்மீது சுமத்தப்பட்டு வருகின்றது.இந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படையும் இல்லை. இவ்வளவு காலமும் நான் பொறுமையாக இருந்தேன்.இக்குற்றச்சாட்டுக்களை சட்ட ரீதியாக அனுகுவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். சமூக ஊடகத்தினை தவறாகக் கையாளும் குழுவினர் போலிச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.எமது பல்கலைக்கழகத்தினைப் பொறுத்த வரையில் இந்த விடயம் நீண்டகாலமாக இடம்பெற்று வருகிறது. இந்தத் தரப்பினர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் நாஜிம் அவர்களது நிருவாகத்தினைக் சீர்குலைக்க சதிசெய்தனர். ஊடக மாநாடுகளை நடத்தினர், அரசியல்வாதிகளைச் சந்தித்தனர். நாசகார வேலைகளில் ஈடுபட்டனர்.இத்தகைய நாசகார வேலைகளில் ஈடுபடுவது இவர்களது வழக்கமாக இருந்து வருகிறது. இவர்கள் தமது கடமைப் பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றுவதில்லை. உரிய காலங்களுக்குள் தமது பட்டங்களை முடிப்பதில்லை. இந்தத் தரப்பின் நடவடிக்கைகளுக்கு ஒரு சில நிருவாகிகளும் ஊழியர்களும் துணைபுரிகின்றனர். பல்கலைக்கழகத்தினை ஒரு பதட்ட நிலையில் வைத்திருப்பதனை இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆனால் இவர்களது இந்த நாசகாரச் செயல்களுக்கு நான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement