அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய டொனால் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புளோரிடா கோல்ப் கிளப்பில் விளையாட ட்ரம்ப் சென்ற போது அங்கு திடீரென துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, அதிகாரிகள் ட்ரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை உளவுப்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி X தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஏற்கனவே, பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரு மாதங்களில் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட 2 ஆவது தாக்குதல் முயற்சி இது என்பதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ட்ரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி; துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய டொனால் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.புளோரிடா கோல்ப் கிளப்பில் விளையாட ட்ரம்ப் சென்ற போது அங்கு திடீரென துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் ட்ரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை உளவுப்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி X தளத்தில் பதிவிட்டுள்ளது.ஏற்கனவே, பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.இரு மாதங்களில் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட 2 ஆவது தாக்குதல் முயற்சி இது என்பதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.