• Sep 19 2024

தமிழ் தரப்புக்களின் தவறான அணுகுமுறைகளால் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் முயற்சிகளுக்கு தடங்கல்- டக்ளஸ் கருத்து!SamugamMedia

Sharmi / Feb 20th 2023, 12:20 pm
image

Advertisement

தென்னிலங்கையின் அரசியல் தரப்புக்கள் கடந்த காலங்களில் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில், தற்போது தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான விடயங்களை தென்னிலங்கையின் அரசியல் தரப்புக்கள் கடந்த காலங்களில் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில், தற்போது தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும்.

இல்லையேல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு சிலர் வெளியிடுகின்ற கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்பதுடன், அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் முயற்சிகளுக்கும் தடங்கல்களை ஏற்படுத்தும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்;.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது பலதரப்பட்டவர்களுடனான சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தரப்புக்களின் தவறான அணுகுமுறைகளால் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் முயற்சிகளுக்கு தடங்கல்- டக்ளஸ் கருத்துSamugamMedia தென்னிலங்கையின் அரசியல் தரப்புக்கள் கடந்த காலங்களில் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில், தற்போது தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான விடயங்களை தென்னிலங்கையின் அரசியல் தரப்புக்கள் கடந்த காலங்களில் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில், தற்போது தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு சிலர் வெளியிடுகின்ற கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்பதுடன், அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் முயற்சிகளுக்கும் தடங்கல்களை ஏற்படுத்தும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்;. கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது பலதரப்பட்டவர்களுடனான சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement