• Sep 20 2024

திருமலையில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாது காணப்படும் வீதியை புனரமைத்துத்தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்!SamugamMedia

Sharmi / Feb 17th 2023, 4:04 pm
image

Advertisement

திருகோணமலை தோப்பூர் -முன்னம்போடி வெட்டை கிராமத்திலுள்ள 2 கிலோ மீற்றர் தூரமுள்ள முன்னம்போடி வீதியானது நீண்டகாலமாக புனரமைக்கப்படாது காணப்படுவதால் இவ்வீதியை புனரமைத்துத்தருமாறு வழியுறுத்தி முன்னம்போடி வெட்டை கிராம மக்கள் இன்று வெள்ளிக்கிழமை பகல் குறித்த வீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கிராமமக்கள் சுலோகங்களை ஏந்தி கோசங்கள் எழுப்பி இவ் கவனயீர்ப்பு இடம்பெற்றது.


கவனயீர்ப்பில் ஈடுபட்ட கிராம மக்கள் கருத்து தெரிவிக்கும்போது,

முன்னம்போடி வெட்டை வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாதுள்ளது.

இது விடயமாக அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலரிடமும் முறையிட்டும் இதுவரை தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை.

தேர்தல் காலங்களில் கிராமங்களுக்கு தேடிவரும் அரசியல்வாதிகளை வெற்றிபெற்ற பின்னர் கண்டு கொள்ளமுடியாது.அப்படித்தான் அவர்களை சந்திக்கச் சென்றாலும் அவர்களது செயலாளர்கள் எம்மை சந்திக்கவிடுவதில்லை.பொய் காரணங்களைகூறி எம்மை திருப்பி விடுவார்கள்.

எனவே இனிமேலாவது அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நடவடிக்கை மேற்கொண்டு முன்னம்போடி வெட்டை வீதியை புனரமைத்துத்தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




திருமலையில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாது காணப்படும் வீதியை புனரமைத்துத்தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்SamugamMedia திருகோணமலை தோப்பூர் -முன்னம்போடி வெட்டை கிராமத்திலுள்ள 2 கிலோ மீற்றர் தூரமுள்ள முன்னம்போடி வீதியானது நீண்டகாலமாக புனரமைக்கப்படாது காணப்படுவதால் இவ்வீதியை புனரமைத்துத்தருமாறு வழியுறுத்தி முன்னம்போடி வெட்டை கிராம மக்கள் இன்று வெள்ளிக்கிழமை பகல் குறித்த வீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது கிராமமக்கள் சுலோகங்களை ஏந்தி கோசங்கள் எழுப்பி இவ் கவனயீர்ப்பு இடம்பெற்றது.கவனயீர்ப்பில் ஈடுபட்ட கிராம மக்கள் கருத்து தெரிவிக்கும்போது,முன்னம்போடி வெட்டை வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாதுள்ளது.இது விடயமாக அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலரிடமும் முறையிட்டும் இதுவரை தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை.தேர்தல் காலங்களில் கிராமங்களுக்கு தேடிவரும் அரசியல்வாதிகளை வெற்றிபெற்ற பின்னர் கண்டு கொள்ளமுடியாது.அப்படித்தான் அவர்களை சந்திக்கச் சென்றாலும் அவர்களது செயலாளர்கள் எம்மை சந்திக்கவிடுவதில்லை.பொய் காரணங்களைகூறி எம்மை திருப்பி விடுவார்கள்.எனவே இனிமேலாவது அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நடவடிக்கை மேற்கொண்டு முன்னம்போடி வெட்டை வீதியை புனரமைத்துத்தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement