• Sep 20 2024

ரோஹிங்கியா அகதிகளை உள்வாங்கும் எண்ணிக்கையை ஆஸ்திரேலியா அதிகரிக்க வேண்டும்: வலியுறுத்தும் வங்கதேசம்!

Tamil nila / Feb 12th 2023, 1:53 pm
image

Advertisement

ஆட்கடத்தல் மற்றும் கடலில் உயிரிழக்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து விவாதிக்க ஆஸ்திரேலியாவில் ஆசிய பசிபிக் நாடுகளின் பிரதிநிதிகள் கூடியுள்ள நிலையில்,  ரோஹிங்கியா அகதிகளை உள்வாங்கும் எண்ணிக்கையை ஆஸ்திரேலியா அதிகரிக்க வேண்டும் என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமென் வலியுறுத்தியிருக்கிறார். 


ஆட்கடத்தல் விவகாரங்களைக் கையாள்வது குறித்த ‘பாலி செயல்முறை’ எனும் முன்னெடுப்பு ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய அரசுகளால் கடந்த 2002ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த செயல்முறையின் கீழ் ஆசிய-பசிபிக் நாடுகளின் பிரதிநிதிகள் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றனர். 



ஆசிய-பசிபிக் நாடுகளின் கடல் பகுதிகளில் படகு வழியாக புலம்பெயரும் ரோஹிங்கியா அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இது தொடர்பாக புதிய பிராந்திய நடவடிக்கை தேவை என அண்மையில் மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்திருந்தன. 


கடந்த 2022ம் ஆண்டை பொறுத்தமட்டில், மியான்மர் அல்லது வங்கதேச முகாம்களிலிருந்து படகுகளில் வெளியேறி 350 உயிரிழந்திருக்கின்றனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.   


ரோஹிங்கியா அகதிகளை உள்வாங்கும் எண்ணிக்கையை பல நாடுகள் கணிசமாக உயர்த்தியிருக்கிறது, அதே போல் ஆஸ்திரேலியாவும் மேலும் அதிகமான ரோஹிங்கியாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமென் தெரிவித்திருக்கிறார். 


“மற்ற நாடுகளால் கூடுதலான ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக் கொள்ள முடியும் பொழுது, ஆஸ்திரேலியாவால் ஏன் முடியாது? அந்த நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது ஆஸ்திரேலியா மேலும் வளமிக்க நாடாகும். ஆதலால் துன்பத்தில் உள்ள மக்களை அதிகமான எண்ணிக்கையில் மீள்குடியமர்த்த ஆஸ்திரேலியா முன்வர வேண்டும்,” என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.   


ரோஹிங்கியா அகதிகளை உள்வாங்கும் எண்ணிக்கையை ஆஸ்திரேலியா அதிகரிக்க வேண்டும்: வலியுறுத்தும் வங்கதேசம் ஆட்கடத்தல் மற்றும் கடலில் உயிரிழக்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து விவாதிக்க ஆஸ்திரேலியாவில் ஆசிய பசிபிக் நாடுகளின் பிரதிநிதிகள் கூடியுள்ள நிலையில்,  ரோஹிங்கியா அகதிகளை உள்வாங்கும் எண்ணிக்கையை ஆஸ்திரேலியா அதிகரிக்க வேண்டும் என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமென் வலியுறுத்தியிருக்கிறார். ஆட்கடத்தல் விவகாரங்களைக் கையாள்வது குறித்த ‘பாலி செயல்முறை’ எனும் முன்னெடுப்பு ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய அரசுகளால் கடந்த 2002ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த செயல்முறையின் கீழ் ஆசிய-பசிபிக் நாடுகளின் பிரதிநிதிகள் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆசிய-பசிபிக் நாடுகளின் கடல் பகுதிகளில் படகு வழியாக புலம்பெயரும் ரோஹிங்கியா அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இது தொடர்பாக புதிய பிராந்திய நடவடிக்கை தேவை என அண்மையில் மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்திருந்தன. கடந்த 2022ம் ஆண்டை பொறுத்தமட்டில், மியான்மர் அல்லது வங்கதேச முகாம்களிலிருந்து படகுகளில் வெளியேறி 350 உயிரிழந்திருக்கின்றனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.   ரோஹிங்கியா அகதிகளை உள்வாங்கும் எண்ணிக்கையை பல நாடுகள் கணிசமாக உயர்த்தியிருக்கிறது, அதே போல் ஆஸ்திரேலியாவும் மேலும் அதிகமான ரோஹிங்கியாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமென் தெரிவித்திருக்கிறார். “மற்ற நாடுகளால் கூடுதலான ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக் கொள்ள முடியும் பொழுது, ஆஸ்திரேலியாவால் ஏன் முடியாது அந்த நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது ஆஸ்திரேலியா மேலும் வளமிக்க நாடாகும். ஆதலால் துன்பத்தில் உள்ள மக்களை அதிகமான எண்ணிக்கையில் மீள்குடியமர்த்த ஆஸ்திரேலியா முன்வர வேண்டும்,” என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.   

Advertisement

Advertisement

Advertisement