• Jan 30 2025

மாற்றுத் திறனாளிகளை தொழிலில் இணைத்தல் திட்டத்தின் கீழ் விருது வழங்கல்

Tharmini / Jan 28th 2025, 1:49 pm
image

மாற்றுத் திறனாளிகளை தொழிலில் இணைத்தல் திட்டத்தின் கீழ் விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (28) இடம்பெற்றது.

குறித்த திட்டத்தினை   சமூக சேவைகள் திணைக்களம்,மனிதவலு வேலைவாய்ப்பு  திணைக்களம் மற்றும் ஜப்பானிய நிதி நிறுவனமான ஜெயிக்கா (JICA) ஆகியன இணைந்து மாற்றுத் திறனாளிகளை தொழிலில் இணைத்தல் எனும் திட்டத்தின் கீழ் வெற்றிகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்களுக்கான குறித்த  விருதுகள்  வழங்கப்பட்டன.

திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜீ.எம். ஹேமந்த குமார தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளை தொழிலில் உள்வாங்கி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை தாங்களே அமைத்து கொள்ளும் நோக்கமாக இத் திட்டம் காணப்படுகிறது. 

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 2024 ம் ஆண்டுக்காக சுமார் 17 மாற்றுத் திறனாளிகள் தொழிலில் இணைத்து கொள்ளப்பட்டு தற்போது உரிய பயனாளிகள் குறித்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த நிகழ்வில் வெற்றிகரமாக தெரிவான மாற்றுத் திறனாளிகள், தொழில் வழங்குனர்கள், பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனித வள அபிவிருத்தி உத்திதோகத்தர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், துறை சார் உத்தியோகத்தர்கள், தொழில் வழங்குனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





மாற்றுத் திறனாளிகளை தொழிலில் இணைத்தல் திட்டத்தின் கீழ் விருது வழங்கல் மாற்றுத் திறனாளிகளை தொழிலில் இணைத்தல் திட்டத்தின் கீழ் விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (28) இடம்பெற்றது.குறித்த திட்டத்தினை   சமூக சேவைகள் திணைக்களம்,மனிதவலு வேலைவாய்ப்பு  திணைக்களம் மற்றும் ஜப்பானிய நிதி நிறுவனமான ஜெயிக்கா (JICA) ஆகியன இணைந்து மாற்றுத் திறனாளிகளை தொழிலில் இணைத்தல் எனும் திட்டத்தின் கீழ் வெற்றிகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்களுக்கான குறித்த  விருதுகள்  வழங்கப்பட்டன.திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜீ.எம். ஹேமந்த குமார தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளை தொழிலில் உள்வாங்கி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை தாங்களே அமைத்து கொள்ளும் நோக்கமாக இத் திட்டம் காணப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 2024 ம் ஆண்டுக்காக சுமார் 17 மாற்றுத் திறனாளிகள் தொழிலில் இணைத்து கொள்ளப்பட்டு தற்போது உரிய பயனாளிகள் குறித்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.குறித்த நிகழ்வில் வெற்றிகரமாக தெரிவான மாற்றுத் திறனாளிகள், தொழில் வழங்குனர்கள், பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனித வள அபிவிருத்தி உத்திதோகத்தர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், துறை சார் உத்தியோகத்தர்கள், தொழில் வழங்குனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement