வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இன்றையதினம் காலை இடம்பெற்றது.
வவுனியா, வைத்தியசாலை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலமானது, யாழ் வீதியை அடைந்து வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஊடாக கண்டி வீதியால் சென்று மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக பசார் வீதியை அடைந்து ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக வைத்தியசாலையை சென்றடைந்தது.
இதன்போது காசநோயை கட்டுப்படுத்துதல் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இதில் தாதியர்கள் பங்கேற்றதுடன், நூற்றுக்கணக்கான மேற்பட்ட முச்சக்கர வண்டிகளும் கலந்து கொண்டன.
வவுனியாவில் காச நோய் தொடர்பில் விழிப்புணர்வு ஊர்வலம். வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இன்றையதினம் காலை இடம்பெற்றது.வவுனியா, வைத்தியசாலை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலமானது, யாழ் வீதியை அடைந்து வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஊடாக கண்டி வீதியால் சென்று மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக பசார் வீதியை அடைந்து ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக வைத்தியசாலையை சென்றடைந்தது.இதன்போது காசநோயை கட்டுப்படுத்துதல் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதில் தாதியர்கள் பங்கேற்றதுடன், நூற்றுக்கணக்கான மேற்பட்ட முச்சக்கர வண்டிகளும் கலந்து கொண்டன.