• May 03 2024

இறந்த மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தை...!samugammedia

Sharmi / Apr 6th 2023, 11:57 am
image

Advertisement

உலகில் குழந்தை இல்லாத பலர் தங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற தத்து எடுப்பது வழக்கம்.  அதே போல் தான் ஸ்பானிஷ் நடிகை ஒருவரும் தத்து எடுத்துக் கொண்டார். ஆனால், நீங்கள் நினைப்பது போல் யாரோ ஒருவரது குழந்தையை அல்ல... அவர் இறந்து போன தனது மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்து எடுத்துள்ளார்.

மனதை நெகிழ வைக்கும் ஒரு சம்பவமாக, 68 வயதான ஸ்பானிய தொலைக்காட்சி நடிகையான அனா ஒப்ரெகன், அனா சாண்ட்ரா என்ற ஒரு வார வயது பெண் குழந்தையை தத்தெடுத்தார். இது புளோரிடாவின் மியாமியில் வசிக்கும் கியூபா நாட்டு பெண்ணிற்கு பிறந்த குழந்தை. வாடகைத் தாயான இவருக்கு, ஸ்பானிஷ நடிகையின் இறந்து போன மகனின் விந்தணு மூலம் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தத்தெடுப்பு பற்றிய வினோதமான விஷயம் என்னவென்றால், நடிகையின் இறந்த மகன் மூலம் குழந்தை பிறந்தது என்பது தான்., இது ஸ்பெயினில் வாடகைத் தாய் மற்றும் குழந்தைகளின் தனியுரிமைக்கான உயிரியல் நெறிமுறைகள் பற்றி ஒரு பெரிய விவாதத்தை எழுப்பியது. இதற்கிடையில், ஒப்ரெகன் தனது சொந்த மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்து எடுத்து, பேத்தியை மகளாக்கிக் கொண்டார்.

"இந்தப் பெண் குழந்தை என் மகள் அல்ல, என் பேத்தி" என்று தொலைக்காட்சி நடிகை அனா ஒப்ரெகன் பிரபல பத்திரிகைக்கு கொடுத்த ஒரு நேர்காணலின் போது, அதன் அட்டை படத்துக்காக குழந்தையுடன் போஸ் கொடுத்தார். " இறந்து போன என் மகனின் கடைசி ஆசையை எப்படி நிறைவேற்றாமல் இருக்க முடியும்?" குழந்தையை இழந்த பெற்றோருக்கு மட்டுமே இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

ஒப்ரெகானுக்கு ஒரே ஒரு குழந்தை மட்டுமே இருந்தது -  அது அவரது இறந்த மகன் அலெஸ் லெகியோ. ஆலெஸ் தனது 27 வயதில் புற்று நோயால் 2020 இல் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வாடகைத் தாய் சட்டவிரோதமாக கருதப்படாததால், புளோரிடாவின் மியாமியில் வசிக்கும் வாடகைத் தாய்க்கு, இறந்து போன மகனின் விந்தணு மூலம் குழந்தை கருத்தரிக்கப்பட்டது. இறந்த மகணின் விந்தணு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இது சாத்தியமானது.

ஸ்பானிய தொலைக்காட்சி நடிகையின் மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்தெடுப்பது ஸ்பெயினில் ஒரு விவாதத்தைத் தூண்டியது. அங்கு அனைத்து வகையான வாடகைத் தாய் முறையும் - பணம் எதுவும் கை மாறாத "பரோபகார" நடவடிக்கை என்று அழைக்கப்படுவது உட்பட - அனைத்து  விதமான முறையும் சட்டவிரோதமானது என கருதப்படுகிறது.



இறந்த மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தை.samugammedia உலகில் குழந்தை இல்லாத பலர் தங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற தத்து எடுப்பது வழக்கம்.  அதே போல் தான் ஸ்பானிஷ் நடிகை ஒருவரும் தத்து எடுத்துக் கொண்டார். ஆனால், நீங்கள் நினைப்பது போல் யாரோ ஒருவரது குழந்தையை அல்ல. அவர் இறந்து போன தனது மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்து எடுத்துள்ளார். மனதை நெகிழ வைக்கும் ஒரு சம்பவமாக, 68 வயதான ஸ்பானிய தொலைக்காட்சி நடிகையான அனா ஒப்ரெகன், அனா சாண்ட்ரா என்ற ஒரு வார வயது பெண் குழந்தையை தத்தெடுத்தார். இது புளோரிடாவின் மியாமியில் வசிக்கும் கியூபா நாட்டு பெண்ணிற்கு பிறந்த குழந்தை. வாடகைத் தாயான இவருக்கு, ஸ்பானிஷ நடிகையின் இறந்து போன மகனின் விந்தணு மூலம் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.தத்தெடுப்பு பற்றிய வினோதமான விஷயம் என்னவென்றால், நடிகையின் இறந்த மகன் மூலம் குழந்தை பிறந்தது என்பது தான்., இது ஸ்பெயினில் வாடகைத் தாய் மற்றும் குழந்தைகளின் தனியுரிமைக்கான உயிரியல் நெறிமுறைகள் பற்றி ஒரு பெரிய விவாதத்தை எழுப்பியது. இதற்கிடையில், ஒப்ரெகன் தனது சொந்த மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்து எடுத்து, பேத்தியை மகளாக்கிக் கொண்டார்."இந்தப் பெண் குழந்தை என் மகள் அல்ல, என் பேத்தி" என்று தொலைக்காட்சி நடிகை அனா ஒப்ரெகன் பிரபல பத்திரிகைக்கு கொடுத்த ஒரு நேர்காணலின் போது, அதன் அட்டை படத்துக்காக குழந்தையுடன் போஸ் கொடுத்தார். " இறந்து போன என் மகனின் கடைசி ஆசையை எப்படி நிறைவேற்றாமல் இருக்க முடியும்" குழந்தையை இழந்த பெற்றோருக்கு மட்டுமே இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.ஒப்ரெகானுக்கு ஒரே ஒரு குழந்தை மட்டுமே இருந்தது -  அது அவரது இறந்த மகன் அலெஸ் லெகியோ. ஆலெஸ் தனது 27 வயதில் புற்று நோயால் 2020 இல் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வாடகைத் தாய் சட்டவிரோதமாக கருதப்படாததால், புளோரிடாவின் மியாமியில் வசிக்கும் வாடகைத் தாய்க்கு, இறந்து போன மகனின் விந்தணு மூலம் குழந்தை கருத்தரிக்கப்பட்டது. இறந்த மகணின் விந்தணு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இது சாத்தியமானது.ஸ்பானிய தொலைக்காட்சி நடிகையின் மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்தெடுப்பது ஸ்பெயினில் ஒரு விவாதத்தைத் தூண்டியது. அங்கு அனைத்து வகையான வாடகைத் தாய் முறையும் - பணம் எதுவும் கை மாறாத "பரோபகார" நடவடிக்கை என்று அழைக்கப்படுவது உட்பட - அனைத்து  விதமான முறையும் சட்டவிரோதமானது என கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement