• Mar 15 2025

காட்டுப்பகுதியில் உரைப்பையில் கட்டி வீசப்பட்ட ஆண் குழந்தை சடலமாக மீட்பு - மட்டக்களப்பில் கொடூரம்

Chithra / Mar 15th 2025, 12:37 pm
image


மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசி எறியப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆண் குழந்தை ஒன்றை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை இன்று சனிக்கிழமை (15) காலையில் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த குழந்தையை உரைப்பையில் கட்டிக் கொண்டு சென்று அதனை சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ள நிலையில் இன்று காலை சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர்

இதனையடுத்து  நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டு வருவதுடன்,

குழந்தை சம்பவதினமான இன்று பிறந்துள்ளதாகவும் குழந்தையை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக பொலிசார் தெரிவித்தனா.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

காட்டுப்பகுதியில் உரைப்பையில் கட்டி வீசப்பட்ட ஆண் குழந்தை சடலமாக மீட்பு - மட்டக்களப்பில் கொடூரம் மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசி எறியப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆண் குழந்தை ஒன்றை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.குறித்த குழந்தை இன்று சனிக்கிழமை (15) காலையில் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த குழந்தையை உரைப்பையில் கட்டிக் கொண்டு சென்று அதனை சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ள நிலையில் இன்று காலை சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர்இதனையடுத்து  நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டு வருவதுடன்,குழந்தை சம்பவதினமான இன்று பிறந்துள்ளதாகவும் குழந்தையை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக பொலிசார் தெரிவித்தனா.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement