• Jan 23 2025

மோசமான வானிலையால் 04 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு

Chithra / Jan 19th 2025, 8:56 am
image

 

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 15 ஆம் திகதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக அநுராதபுரம், கிளிநொச்சி, கேகாலை மற்றும் காலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த  நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த மாவட்டங்களில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 603 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 

கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக  4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டங்களில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர்  பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மோசமான வானிலையால் 04 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு  நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கடந்த 15 ஆம் திகதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக அநுராதபுரம், கிளிநொச்சி, கேகாலை மற்றும் காலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த  நிலையம் தெரிவித்துள்ளது.அந்த மாவட்டங்களில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 603 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக  4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த மாவட்டங்களில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர்  பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement