• Nov 19 2024

அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்!

Tamil nila / Nov 13th 2024, 6:46 pm
image

நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக யாழ்ப்பாணம் மாவட்ட வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் இன்று புதன்கிழமை காலை 8 மணியில் இருந்து ஆரம்பமாகின.


யாழ். மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில்  பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளுக்கு வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்ல விசேட படகு போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.


இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக யாழ்ப்பாணம் மாவட்ட வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் இன்று புதன்கிழமை காலை 8 மணியில் இருந்து ஆரம்பமாகின.யாழ். மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில்  பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளுக்கு வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்ல விசேட படகு போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement