தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருந்து கிடைக்கபெறவேண்டிய நிதி கிடைக்காத காரணத்தினால் அரசு அச்சக கூட்டுத்தாபனம் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள்ஆணைக்குழுவிற்கு பல தடவைகள் நினைவூட்டப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தி தொடர்பாளர் திருமதி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையால் ஆண்டு முழுவதும் ஏனைய பணிகளுக்கு பணம் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலுக்காக பல மாவட்டங்களில் தபால் வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அந்த வாக்குச்சீட்டுக்கள் அனைத்தும் அச்சகத்தின் பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் இரத்து செய்யப்பட்டால் அந்த வாக்கு சீட்டுகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டிய நிலையேற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு சீட்டுகளை அழிக்கப்பட வேண்டிய நிலையேற்படும் - அரசு அச்சக கூட்டுத்தாபனம் பாரிய சிக்கலில். samugammedia தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருந்து கிடைக்கபெறவேண்டிய நிதி கிடைக்காத காரணத்தினால் அரசு அச்சக கூட்டுத்தாபனம் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தேர்தல்கள்ஆணைக்குழுவிற்கு பல தடவைகள் நினைவூட்டப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தி தொடர்பாளர் திருமதி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.இந்நிலைமையால் ஆண்டு முழுவதும் ஏனைய பணிகளுக்கு பணம் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உள்ளாட்சி தேர்தலுக்காக பல மாவட்டங்களில் தபால் வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அந்த வாக்குச்சீட்டுக்கள் அனைத்தும் அச்சகத்தின் பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.உள்ளாட்சி தேர்தல் இரத்து செய்யப்பட்டால் அந்த வாக்கு சீட்டுகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டிய நிலையேற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.