• May 19 2024

மே-18 தமிழின அழிப்பு நாளிலும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் - அரசியல் தீர்வே அவசியம்.! samugammedia

Tamil nila / May 20th 2023, 6:42 pm
image

Advertisement

மே-18 தமிழின அழிப்பு நாளிலும் கிழக்கு மாகாணத்தில் நினைவேந்தல்களுக்கு  புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும் எனவே எதிர்காலத்தில் நினைவுகூரல்களை நடாத்த  வேண்டுமாயின் நிரந்தரமான அரசியல் தீர்வொன்று வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி  லவகுசராசா வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் நின்று தீர்வுத் திட்டங்களை ஒருமித்து, தேசியத்திற்கும் சர்வதேசத்திற்கும் முன்வைக்க வேண்டும். என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி  லவகுசராசா வலியுறுத்தியுள்ளார்.

வடகிழக்கில் அரசியல்வாதிகள் இருந்தாலும் மக்களின் அரசியல் உரிமை, அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக சமூகமயப்படுத்துவதற்கும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்குமான தார்மீகப் பொறுப்பு சிவில் சமூகங்களாகிய எங்களுக்கு உண்டு.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள்  ஒருமித்த ரீதியில் தங்களுடைய அரியல் தீர்வு தொடர்பான விடயங்களை தேசத்திற்கோ சர்வதேசத்திற்கோ பரிந்துரை செய்யாமல் ஒவ்வொருவரும் தமக்கேற்றவகையில் தீர்வுப் பொதிகளை முன்வைத்தவண்ணமுள்ளனர்.

அந்த வகையில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்து அரசியல் தீர்வுகளை முன்வைப்பதானது காலத்தின் தேவையாகும்.

இலங்கைக்கு வரும்  ஒவ்வொரு இராஜதந்திரிகளும் வடக்கு கிழக்கிலும் தெற்கிலும் தமது பயணங்களை நிறைவு செய்த பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தெற்கு பற்றி நிலையாக நிலைப்பாட்டை கூறினாலும் வடக்கு கிழக்கில் ஒவ்வொரு தரப்பும் பல்வேறு தரப்பாக செயற்படுவதால் இராஜதந்திரிகள் நிலையான விடயங்களை முன்வைப்பதில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பு நாளிலும் கிழக்கு மாகாணத்தில் நினைவேந்தல்களுக்கு  புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காணப்பட்டது. இது போன்ற நினைவுகூரல்களை நடாத்த  வேண்டுமாயின் நிரந்தரமான அரசியல் தீர்வொன்று வேண்டும்.

மே-18 தமிழின அழிப்பு நாளிலும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் - அரசியல் தீர்வே அவசியம். samugammedia மே-18 தமிழின அழிப்பு நாளிலும் கிழக்கு மாகாணத்தில் நினைவேந்தல்களுக்கு  புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும் எனவே எதிர்காலத்தில் நினைவுகூரல்களை நடாத்த  வேண்டுமாயின் நிரந்தரமான அரசியல் தீர்வொன்று வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி  லவகுசராசா வலியுறுத்தியுள்ளார்.அத்துடன் வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் நின்று தீர்வுத் திட்டங்களை ஒருமித்து, தேசியத்திற்கும் சர்வதேசத்திற்கும் முன்வைக்க வேண்டும். என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி  லவகுசராசா வலியுறுத்தியுள்ளார்.வடகிழக்கில் அரசியல்வாதிகள் இருந்தாலும் மக்களின் அரசியல் உரிமை, அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக சமூகமயப்படுத்துவதற்கும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்குமான தார்மீகப் பொறுப்பு சிவில் சமூகங்களாகிய எங்களுக்கு உண்டு.வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள்  ஒருமித்த ரீதியில் தங்களுடைய அரியல் தீர்வு தொடர்பான விடயங்களை தேசத்திற்கோ சர்வதேசத்திற்கோ பரிந்துரை செய்யாமல் ஒவ்வொருவரும் தமக்கேற்றவகையில் தீர்வுப் பொதிகளை முன்வைத்தவண்ணமுள்ளனர்.அந்த வகையில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்து அரசியல் தீர்வுகளை முன்வைப்பதானது காலத்தின் தேவையாகும்.இலங்கைக்கு வரும்  ஒவ்வொரு இராஜதந்திரிகளும் வடக்கு கிழக்கிலும் தெற்கிலும் தமது பயணங்களை நிறைவு செய்த பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தெற்கு பற்றி நிலையாக நிலைப்பாட்டை கூறினாலும் வடக்கு கிழக்கில் ஒவ்வொரு தரப்பும் பல்வேறு தரப்பாக செயற்படுவதால் இராஜதந்திரிகள் நிலையான விடயங்களை முன்வைப்பதில்லை.கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பு நாளிலும் கிழக்கு மாகாணத்தில் நினைவேந்தல்களுக்கு  புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காணப்பட்டது. இது போன்ற நினைவுகூரல்களை நடாத்த  வேண்டுமாயின் நிரந்தரமான அரசியல் தீர்வொன்று வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement