• May 19 2024

தொடரை கைப்பற்றியது வங்கதேசம்! கோபத்தில் இந்திய ரசிகர்கள்!!

crownson / Dec 8th 2022, 6:36 am
image

Advertisement

வங்கசேதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி 2-வது ஒரு நாள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி முதலில் துடுப்பாட்டம்  செய்தது.

வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. 

அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் மெஹதி மற்றும் மஹ்முதுல்லாஹ் சிறப்பாக விளையாடி அணியின் ரன்விகிதத்தை உயர்த்தினர்.

மஹ்முதுல்லாஹ் 77 ரன்கள் எடுத்து உம்ரான் மாலிக் பந்துவீச்சில் அவுட்டானார்.

ஹெதி 100 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களையும் உம்ரான் மாலிக் மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

துடுப்பாட்டத்தின் போது ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பாதியில் போட்டியில் வெளியேறினார்.

அதனால் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக தவான் உடன் விராட் கோலி ஓபனிங் விளையாடினார்.

முதல் பந்திலேயே விராட் பவுண்டரி அடித்தார். இதனால் இன்றைய போட்டி விராட் கோலியின் கையில் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அடுத்த ஓவரிலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

விராட் கோலியை தொடர்ந்து தவான், வாஷிங்டன் சுந்தர், கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

இந்திய அணி 65 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் அக்ஷர் படேல் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ஸ்ரேயாஸ் 82 ரன்னிலும் அக்ஷர் படேல் 56 ரன்களிலும் அவுட்டாகினர்.காயம் காரணமாக ஓபனிங் இறங்காத ரோஹித் சர்மா 9-வது வீராக களமிறங்கி இந்திய அணியின் வெற்றிக்காக போராடினார்.

ரோஹித் சர்மாவின் அதிரடியால் கடைசி ஓவர் வரை போட்டி பரபரப்பாக சென்றது. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிர் ரஹ்மான் பந்துவீசினார்.

அவரது பந்தை ரோஹித் பவுண்டரிகளுக்கு விளாசினார். இதனால் கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் ரோஹித் சிக்ஸர் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி பந்தை அருமையாக வீசிய ரஹ்மான் ரன் எடுக்க முடியாமல் ரோஹித்தை தடுத்தார். இதனால் வங்க தேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் வங்தேசம்  2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

தொடரை கைப்பற்றியது வங்கதேசம் கோபத்தில் இந்திய ரசிகர்கள் வங்கசேதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி 2-வது ஒரு நாள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி முதலில் துடுப்பாட்டம்  செய்தது.வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.  அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் மெஹதி மற்றும் மஹ்முதுல்லாஹ் சிறப்பாக விளையாடி அணியின் ரன்விகிதத்தை உயர்த்தினர். மஹ்முதுல்லாஹ் 77 ரன்கள் எடுத்து உம்ரான் மாலிக் பந்துவீச்சில் அவுட்டானார். ஹெதி 100 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களையும் உம்ரான் மாலிக் மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துடுப்பாட்டத்தின் போது ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பாதியில் போட்டியில் வெளியேறினார். அதனால் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக தவான் உடன் விராட் கோலி ஓபனிங் விளையாடினார். முதல் பந்திலேயே விராட் பவுண்டரி அடித்தார். இதனால் இன்றைய போட்டி விராட் கோலியின் கையில் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அடுத்த ஓவரிலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.விராட் கோலியை தொடர்ந்து தவான், வாஷிங்டன் சுந்தர், கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இந்திய அணி 65 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் அக்ஷர் படேல் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்ரேயாஸ் 82 ரன்னிலும் அக்ஷர் படேல் 56 ரன்களிலும் அவுட்டாகினர்.காயம் காரணமாக ஓபனிங் இறங்காத ரோஹித் சர்மா 9-வது வீராக களமிறங்கி இந்திய அணியின் வெற்றிக்காக போராடினார். ரோஹித் சர்மாவின் அதிரடியால் கடைசி ஓவர் வரை போட்டி பரபரப்பாக சென்றது. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிர் ரஹ்மான் பந்துவீசினார். அவரது பந்தை ரோஹித் பவுண்டரிகளுக்கு விளாசினார். இதனால் கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் ரோஹித் சிக்ஸர் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை அருமையாக வீசிய ரஹ்மான் ரன் எடுக்க முடியாமல் ரோஹித்தை தடுத்தார். இதனால் வங்க தேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்தேசம்  2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Advertisement

Advertisement

Advertisement