• Oct 19 2026

யாழில் சிக்கிய தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்; வெளிவரப்போகும் உண்மைகள் என்ன?

Chithra / Oct 18th 2026, 11:19 am
image


இலங்கையில் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அதிக இயந்திரக் கொள்ளளவு (CC) கொண்ட 5 மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


குறித்த மோட்டார் சைக்கிள்களின் பதிவுகள் மற்றும் இலக்கத்தகடுகளில் மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


கைப்பற்றப்பட்ட ஐந்து மோட்டார் சைக்கிள்களும் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.


இந்த மோட்டார் சைக்கிள்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட விதம், அவற்றின் பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் இலக்கத்தகடுகளின் உண்மைத்தன்மை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


அத்துடன், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

யாழில் சிக்கிய தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்; வெளிவரப்போகும் உண்மைகள் என்ன இலங்கையில் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அதிக இயந்திரக் கொள்ளளவு (CC) கொண்ட 5 மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த மோட்டார் சைக்கிள்களின் பதிவுகள் மற்றும் இலக்கத்தகடுகளில் மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.கைப்பற்றப்பட்ட ஐந்து மோட்டார் சைக்கிள்களும் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.இந்த மோட்டார் சைக்கிள்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட விதம், அவற்றின் பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் இலக்கத்தகடுகளின் உண்மைத்தன்மை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.அத்துடன், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement