• Sep 21 2024

உக்ரைனுக்கு எதிராக கைகோர்த்த பெலாரஸ் - நாட்டில் இருந்து போரிட அனுமதி!

Tamil nila / Feb 1st 2023, 7:32 pm
image

Advertisement

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எதிராக நடைபெற்று கொண்டிருக்கும் போரில் உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் முன்வந்துள்ளது.


இதனையடுத்து உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான பெலாரஸ் கூடுதல் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

''ரஷ்யாவிற்கு தற்பொழுது எந்த உதவியும் தேவைப்படாவிட்டாலும் எங்கள் ரஷ்ய சகோதரர்களுக்கு உதவியை வழங்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.''என தெரிவித்துள்ளார்.


பெலாரஸ், ரஷ்யா படையெடுப்பின் போது, ரஷ்யா படையின் ஒரு பகுதியை தனது நாட்டில் இருந்து போரிட அனுமதித்தது.

மேலும் உக்ரைனுக்குள் ரஷ்ய ஏவுகணைகளை ஏவுவதற்கான ஏவுதளமாகவும் செயல்பட்டு வருகிறது.

படையெடுப்பை தங்களது நாட்டில் நடத்த அனுமதித்திருந்தாலும் பெலாரஸ் தனது படைகள் எதையும் போரில் ஈடுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு எதிராக கைகோர்த்த பெலாரஸ் - நாட்டில் இருந்து போரிட அனுமதி ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எதிராக நடைபெற்று கொண்டிருக்கும் போரில் உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் முன்வந்துள்ளது.இதனையடுத்து உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான பெலாரஸ் கூடுதல் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.''ரஷ்யாவிற்கு தற்பொழுது எந்த உதவியும் தேவைப்படாவிட்டாலும் எங்கள் ரஷ்ய சகோதரர்களுக்கு உதவியை வழங்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.''என தெரிவித்துள்ளார்.பெலாரஸ், ரஷ்யா படையெடுப்பின் போது, ரஷ்யா படையின் ஒரு பகுதியை தனது நாட்டில் இருந்து போரிட அனுமதித்தது.மேலும் உக்ரைனுக்குள் ரஷ்ய ஏவுகணைகளை ஏவுவதற்கான ஏவுதளமாகவும் செயல்பட்டு வருகிறது.படையெடுப்பை தங்களது நாட்டில் நடத்த அனுமதித்திருந்தாலும் பெலாரஸ் தனது படைகள் எதையும் போரில் ஈடுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement