• Oct 11 2024

கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட்டம்; நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாப மரணம்

Chithra / Aug 30th 2024, 1:05 pm
image

Advertisement


வெள்ளவத்தை கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவின் போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.

தொழில்நுட்பவியலாளரான கிருலப்பனை சித்தார்த்த வீதியில் வசித்த பாஸ்கரன் என்ற 22 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பதினைந்து பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இரவு பிறந்தநாள் விழாவின் போதே இத் துயரம் நிகழ்ந்துள்ளது.

இதில் நீரில் மூழ்கிய பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனைக் காப்பாற்றச் சென்ற மற்றுமொரு இளைஞனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் உள்ளிட்ட சிலர் கடலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதன்போது நீரில் மூழ்கிய இளைஞனை காப்பாற்ற சென்ற இளைஞர்கள் மத்தியில் இந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்கரையில் பிறந்தநாள் கொண்டாட்டம்; நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாப மரணம் வெள்ளவத்தை கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவின் போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.தொழில்நுட்பவியலாளரான கிருலப்பனை சித்தார்த்த வீதியில் வசித்த பாஸ்கரன் என்ற 22 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பதினைந்து பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இரவு பிறந்தநாள் விழாவின் போதே இத் துயரம் நிகழ்ந்துள்ளது.இதில் நீரில் மூழ்கிய பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனைக் காப்பாற்றச் சென்ற மற்றுமொரு இளைஞனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் உள்ளிட்ட சிலர் கடலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.அதன்போது நீரில் மூழ்கிய இளைஞனை காப்பாற்ற சென்ற இளைஞர்கள் மத்தியில் இந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement