விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 12ஆம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாபெரும் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு புண்ணை நீராவி பகுதியிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி லெப்டினன் கேணல் சந்தன சோமபால தலைமையில் குறித்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முகாமில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தனர்.
தற்போது நிலவி வரும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்குடனே இந்த இரத்ததான முகாம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம். விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 12ஆம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாபெரும் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு புண்ணை நீராவி பகுதியிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி லெப்டினன் கேணல் சந்தன சோமபால தலைமையில் குறித்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த முகாமில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தனர். தற்போது நிலவி வரும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்குடனே இந்த இரத்ததான முகாம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.