குப்பையில் இருந்து ஏழு மாத சிசு உடல் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சிசுவின் உடலை கைப்பற்றி பொலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை சத்யா நகர் ஆற்றங்கரை ஓரம் ஒரு இடத்தில் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆற்றங்கரைக்கு வந்த பொதுமக்கள் அங்கு குப்பைக்கு நடுவில் இறந்த நிலையில் 7 மாத சிசு இருந்ததை பார்த்த உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர் .
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டூர்புரம் பொலிஸார் சிசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் சிசு உடலை வீசி சென்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடிவருகின்றனர். அடையாறு ஆற்றங்கரையோரம் 7 மாத சிசு உடலை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பையில் மீட்கப்பட்ட 7 மாத சிசுவின் சடலம். samugammedia குப்பையில் இருந்து ஏழு மாத சிசு உடல் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சிசுவின் உடலை கைப்பற்றி பொலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை சைதாப்பேட்டை சத்யா நகர் ஆற்றங்கரை ஓரம் ஒரு இடத்தில் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆற்றங்கரைக்கு வந்த பொதுமக்கள் அங்கு குப்பைக்கு நடுவில் இறந்த நிலையில் 7 மாத சிசு இருந்ததை பார்த்த உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர் .தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டூர்புரம் பொலிஸார் சிசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் சிசு உடலை வீசி சென்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடிவருகின்றனர். அடையாறு ஆற்றங்கரையோரம் 7 மாத சிசு உடலை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.