• May 19 2024

கொன்று புதைக்கப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு! நண்பன் மாயம்! - இலங்கையில் கொடூரம் samugammedia

Chithra / Apr 8th 2023, 9:27 am
image

Advertisement

எல்பிட்டிய எத்கதுர திவித்துரவத்த ஏரியில் உள்ள கட்டுபொல பயிர்ச்செய்கை வயலில் இளைஞன் ஒருவர் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

திவித்துரவத்தை வீட்டில் வசிக்கும் சாந்தகுமார சரத் குமார என்பவரின் சடலமே நேற்று பிற்பகல் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நண்பர்கள் குழுவுடன் சென்ற இந்த இளைஞன் இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் உற்ற நண்பனையும் காணவில்லை எனவும், அவரது தொலைபேசி இயங்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள் காணாமல் போன நண்பரின் வீட்டில் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் பாதி புதைக்கப்பட்ட இடத்தில் அவரது பணப்பை காணப்பட்டதாகவும், அதற்கமைய, சடலம் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞனுடையது என அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எல்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தவத்தவின் பணிப்புரையின் பிரகாரம் எல்பிட்டிய தலைமையக பொலிஸ் பரிசோதகர் அனுர விஜேசிங்க உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கொன்று புதைக்கப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு நண்பன் மாயம் - இலங்கையில் கொடூரம் samugammedia எல்பிட்டிய எத்கதுர திவித்துரவத்த ஏரியில் உள்ள கட்டுபொல பயிர்ச்செய்கை வயலில் இளைஞன் ஒருவர் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.திவித்துரவத்தை வீட்டில் வசிக்கும் சாந்தகுமார சரத் குமார என்பவரின் சடலமே நேற்று பிற்பகல் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நண்பர்கள் குழுவுடன் சென்ற இந்த இளைஞன் இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த இளைஞனின் உற்ற நண்பனையும் காணவில்லை எனவும், அவரது தொலைபேசி இயங்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள் காணாமல் போன நண்பரின் வீட்டில் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சடலம் பாதி புதைக்கப்பட்ட இடத்தில் அவரது பணப்பை காணப்பட்டதாகவும், அதற்கமைய, சடலம் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞனுடையது என அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.எல்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தவத்தவின் பணிப்புரையின் பிரகாரம் எல்பிட்டிய தலைமையக பொலிஸ் பரிசோதகர் அனுர விஜேசிங்க உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement