• Apr 13 2025

கோர விபத்தில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு; தாய் உட்பட மூவர் காயம்

Chithra / Apr 11th 2025, 12:34 pm
image

 

மினுவாங்கொட- குருணாகல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மினுவங்கொடை, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த ரஷான் நிம்ஹாஸ் என்ற பாலர் பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கல்கந்த சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண், அவரது மற்றுமொரு குழந்தை மற்றும் அவரது தாயார் ஆகியோர் அடங்குவர்.

காயமடைந்தவர்கள் மினுவாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கோர விபத்தில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு; தாய் உட்பட மூவர் காயம்  மினுவாங்கொட- குருணாகல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மினுவங்கொடை, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த ரஷான் நிம்ஹாஸ் என்ற பாலர் பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்கந்த சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.காயமடைந்தவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண், அவரது மற்றுமொரு குழந்தை மற்றும் அவரது தாயார் ஆகியோர் அடங்குவர்.காயமடைந்தவர்கள் மினுவாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement