• May 17 2024

தாயிடம் ஓடிச் சென்ற சிறுவன் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..! கதறும் தாய் - தமிழர் பகுதியில் பெரும் சோகம்..!

Chithra / Dec 17th 2023, 4:43 pm
image

Advertisement

 


மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த விசேட தேவையுடைய 16 வயதுடைய அமீர்தீன் யாசிர் அறபாத் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

தாயை எதிர்பார்த்து பஸ் தரிப்பிடத்தில் இருந்த இச்சிறுவன்,

தாயை கண்டதும் வீதியை கடந்து தாயிடம் ஓடிச் செல்லும் போது, 

பிரதான வீதியால் பயணித்த தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதுண்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தள்ளார்.

பஸ்ஸின் சாரதி ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிறுவனின் சடலம் 1990 விசேட அம்பியுலன்ஸ் மூலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ். எம்.. நஸீர், விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

மேலும் குறித்த தாய்  யாசகம் பெறுவதற்காக கல்முனை சென்று ஊர் வரும்போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


தாயிடம் ஓடிச் சென்ற சிறுவன் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. கதறும் தாய் - தமிழர் பகுதியில் பெரும் சோகம்.  மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த விசேட தேவையுடைய 16 வயதுடைய அமீர்தீன் யாசிர் அறபாத் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.தாயை எதிர்பார்த்து பஸ் தரிப்பிடத்தில் இருந்த இச்சிறுவன்,தாயை கண்டதும் வீதியை கடந்து தாயிடம் ஓடிச் செல்லும் போது, பிரதான வீதியால் பயணித்த தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதுண்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தள்ளார்.பஸ்ஸின் சாரதி ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் சடலம் 1990 விசேட அம்பியுலன்ஸ் மூலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ். எம். நஸீர், விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.மேலும் குறித்த தாய்  யாசகம் பெறுவதற்காக கல்முனை சென்று ஊர் வரும்போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement