• Sep 20 2024

காதலர் தினத்தில் 1200 கி.மீ நடந்து காதலிக்கு திருமண அழைப்பிதழை கொடுத்த காதலன்! SamugamMedia

Tamil nila / Feb 14th 2023, 7:00 pm
image

Advertisement

தாய்லாந்தின் மத்திய மாகாணத்தில் உள்ள Nakhon Nayok நகரில் வசிக்கும் Suthep Maewi Prompit, காதலர் தினமான இன்று (14ம் திகதி)  தனது காதலியை சந்திக்க ஒரு மாதமாக 1,200 கிலோமீட்டர்கள் கால் நடையாக நடந்து சென்று காதலிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். 


52 வயதான சுதேப் ப்ரோம்பீத், ஜனவரி 14 அன்று தனது சொந்த ஊரிலிருந்து இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் இன்று (பெப்ரவரி 14) தென்கிழக்கு தாய்லாந்தில் உள்ள சாதுன் என்ற பகுதிக்கு வந்த அவர், அங்கு வசிக்கும் தனது காதலியான 56 வயதான தனபா யாவ்-ஆன் என்பவரை சந்தித்து அவருக்கு திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப வன்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவரது பயணம் தொடங்கியது என  சுதேப் ப்ரோம்பீத் தெரிவித்துள்ளார். 


மேலும், இந்த பயணம் தனது வருங்கால மனைவியாக இருக்கும் பெண்ணின் மீதான தனது காதலை நிரூபிக்கும் என்றும், அதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் ப்ராம்பித் தெரிவித்துள்ளார். ப்ரோம்பீத் 1,200 கிலோமீற்றர் பயணத்தை இடைநில்லா கார் பயணமாக மேற்கொண்டால், அதற்கு 16 மணிநேரம் ஆகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த தூரத்தை எந்த இடைவெளியும் எடுக்காமல் நடந்தால், அந்த மணிநேரம் கிட்டத்தட்ட 200 மணிநேரமாக இருக்கும். இதற்கிடையில், தனது திருமணத்தின் பின்னர், தானும் தனது மனைவியும் எதிர்காலத்தில் தாய்லாந்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக ஊடகங்களுக்கு ப்ரோம்பீத் குறிப்பிட்டுள்ளார். 

காதலர் தினத்தில் 1200 கி.மீ நடந்து காதலிக்கு திருமண அழைப்பிதழை கொடுத்த காதலன் SamugamMedia தாய்லாந்தின் மத்திய மாகாணத்தில் உள்ள Nakhon Nayok நகரில் வசிக்கும் Suthep Maewi Prompit, காதலர் தினமான இன்று (14ம் திகதி)  தனது காதலியை சந்திக்க ஒரு மாதமாக 1,200 கிலோமீட்டர்கள் கால் நடையாக நடந்து சென்று காதலிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். 52 வயதான சுதேப் ப்ரோம்பீத், ஜனவரி 14 அன்று தனது சொந்த ஊரிலிருந்து இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் இன்று (பெப்ரவரி 14) தென்கிழக்கு தாய்லாந்தில் உள்ள சாதுன் என்ற பகுதிக்கு வந்த அவர், அங்கு வசிக்கும் தனது காதலியான 56 வயதான தனபா யாவ்-ஆன் என்பவரை சந்தித்து அவருக்கு திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப வன்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவரது பயணம் தொடங்கியது என  சுதேப் ப்ரோம்பீத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பயணம் தனது வருங்கால மனைவியாக இருக்கும் பெண்ணின் மீதான தனது காதலை நிரூபிக்கும் என்றும், அதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் ப்ராம்பித் தெரிவித்துள்ளார். ப்ரோம்பீத் 1,200 கிலோமீற்றர் பயணத்தை இடைநில்லா கார் பயணமாக மேற்கொண்டால், அதற்கு 16 மணிநேரம் ஆகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த தூரத்தை எந்த இடைவெளியும் எடுக்காமல் நடந்தால், அந்த மணிநேரம் கிட்டத்தட்ட 200 மணிநேரமாக இருக்கும். இதற்கிடையில், தனது திருமணத்தின் பின்னர், தானும் தனது மனைவியும் எதிர்காலத்தில் தாய்லாந்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக ஊடகங்களுக்கு ப்ரோம்பீத் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement