• Apr 27 2026

ஈரான்-அமெரிக்கப் பேச்சுவார்த்தை முறிவு- அதிகரிக்கும் கச்சா எண்ணெயின் விலை !

Ziya / Apr 27th 2026, 3:44 pm
image

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. 

பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 106.56 டாலராக உயர்ந்துள்ளதுடன், ஹோர்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

இன்று அதிகாலை நிலவரப்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் 1% உயர்ந்து 106.56 டாலராகவும், அமெரிக்க கச்சா எண்ணெய் 95.25 டாலராகவும் அதிகரித்துள்ளது.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தனது தூதர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரை பாகிஸ்தானுக்கு அனுப்பும் திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.

பேச்சுவார்த்தை முடங்கிய சில மணிநேரங்களிலேயே, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் (IRGC) ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே இரண்டு சரக்குக் கப்பல்களில் ஏறி அவற்றைச் சிறைபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலிக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி மிரட்டலாகப் பார்க்கப்படுகிறது.

தமது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது:

"ஈரானியத் தலைமையிடம் எந்த அதிகாரமும் இல்லை, அங்கு உட்கட்சிப் பூசலும் குழப்பமுமே நிலவுகிறது. அவர்கள் பேச விரும்பினால், எங்களை அழைத்தால் மட்டும் போதும்! பயணங்களில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை."

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இஸ்லாமாபாத் வந்த போதிலும், அவர் பாகிஸ்தான் அதிகாரிகளை மட்டுமே சந்தித்துத் திரும்பியுள்ளார்.

அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஈரான்-அமெரிக்கப் பேச்சுவார்த்தை முறிவு- அதிகரிக்கும் கச்சா எண்ணெயின் விலை ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 106.56 டாலராக உயர்ந்துள்ளதுடன், ஹோர்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.இன்று அதிகாலை நிலவரப்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் 1% உயர்ந்து 106.56 டாலராகவும், அமெரிக்க கச்சா எண்ணெய் 95.25 டாலராகவும் அதிகரித்துள்ளது.ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தனது தூதர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரை பாகிஸ்தானுக்கு அனுப்பும் திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.பேச்சுவார்த்தை முடங்கிய சில மணிநேரங்களிலேயே, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் (IRGC) ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே இரண்டு சரக்குக் கப்பல்களில் ஏறி அவற்றைச் சிறைபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலிக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி மிரட்டலாகப் பார்க்கப்படுகிறது.தமது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது:"ஈரானியத் தலைமையிடம் எந்த அதிகாரமும் இல்லை, அங்கு உட்கட்சிப் பூசலும் குழப்பமுமே நிலவுகிறது. அவர்கள் பேச விரும்பினால், எங்களை அழைத்தால் மட்டும் போதும் பயணங்களில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை."ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இஸ்லாமாபாத் வந்த போதிலும், அவர் பாகிஸ்தான் அதிகாரிகளை மட்டுமே சந்தித்துத் திரும்பியுள்ளார்.அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement