• Sep 19 2024

உக்ரைனுக்கு அதி சக்திவாய்ந்த டாங்கிகளை வழங்கிய பிரித்தானியா!

Tamil nila / Jan 14th 2023, 10:06 pm
image

Advertisement

உக்ரைன் நாட்டின் போர் முயற்சிக்கு வலுசேர்க்க பிரித்தானியா சேலஞ்சர் 2 டாங்கிகளை அனுப்ப உள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.


உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் சனிக்கிழமை தொலைபேசி ஊடகா பேசிய ரிஷி சுனக், உபகரணங்கள் மற்றும் கூடுதல் பீரங்கி அமைப்புகளை அனுப்புவதாக உறுதி செய்தார்.


டாங்கிகளை அனுப்பும் முடிவு போர்க்களத்தில் எங்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், மற்ற கூட்டாளர்களுக்கு சரியான சமிக்ஞையை அனுப்பும் என்று உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்தார்.


இங்கிலாந்தின் ஆதரவு எப்போதும் வலுவானது என்றும் இப்போது ஊடுருவ முடியாதது என்றும் அவர் கூறினார்.


அழைப்பின் போது, சுனக் மற்றும் ஜெலென்ஸ்கி ஆகியோர் சமீபத்திய உக்ரேனிய வெற்றிகள் குறித்தும் விவாதித்ததாக டவுனிங் வீதி தகவல்கள் தெரிவிக்கின்றன.


உக்ரைனின் கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள கார்கிவ் மற்றும் லிவிவ் பகுதிகள் உட்பட உக்ரைன் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.


டினிப்ரோவில் உள்ள ஒன்பது மாடி குடியிருப்பு தாக்குதலால் சேதமடைந்ததால், ஐந்து பேர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 15 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.


பிரிட்டிஷ் இராணுவத்தின் முக்கிய போர் டாங்கான சேலஞ்சர்ஸ், உக்ரைன் படைகளுக்கு ரஷ்ய துருப்புக்களை பின்வாங்க உதவும் என ரிஷி சுகன் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு அதி சக்திவாய்ந்த டாங்கிகளை வழங்கிய பிரித்தானியா உக்ரைன் நாட்டின் போர் முயற்சிக்கு வலுசேர்க்க பிரித்தானியா சேலஞ்சர் 2 டாங்கிகளை அனுப்ப உள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் சனிக்கிழமை தொலைபேசி ஊடகா பேசிய ரிஷி சுனக், உபகரணங்கள் மற்றும் கூடுதல் பீரங்கி அமைப்புகளை அனுப்புவதாக உறுதி செய்தார்.டாங்கிகளை அனுப்பும் முடிவு போர்க்களத்தில் எங்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், மற்ற கூட்டாளர்களுக்கு சரியான சமிக்ஞையை அனுப்பும் என்று உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்தார்.இங்கிலாந்தின் ஆதரவு எப்போதும் வலுவானது என்றும் இப்போது ஊடுருவ முடியாதது என்றும் அவர் கூறினார்.அழைப்பின் போது, சுனக் மற்றும் ஜெலென்ஸ்கி ஆகியோர் சமீபத்திய உக்ரேனிய வெற்றிகள் குறித்தும் விவாதித்ததாக டவுனிங் வீதி தகவல்கள் தெரிவிக்கின்றன.உக்ரைனின் கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள கார்கிவ் மற்றும் லிவிவ் பகுதிகள் உட்பட உக்ரைன் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.டினிப்ரோவில் உள்ள ஒன்பது மாடி குடியிருப்பு தாக்குதலால் சேதமடைந்ததால், ஐந்து பேர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 15 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.பிரிட்டிஷ் இராணுவத்தின் முக்கிய போர் டாங்கான சேலஞ்சர்ஸ், உக்ரைன் படைகளுக்கு ரஷ்ய துருப்புக்களை பின்வாங்க உதவும் என ரிஷி சுகன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement