• Sep 20 2024

ரஷ்யாவிற்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் பிரிட்டன்!

Tamil nila / Feb 8th 2023, 4:11 pm
image

Advertisement

ரஷ்யாவிற்கு எதிராக பிரித்தானியாக பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 


இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அரசாங்க அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கு பதிலளிக்கும் வகையில், பொருளாதாரத் தடைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன்படி புடினின் தனிப்பட்ட சொத்துக்களை கட்டியெழுப்ப உதவியவர்கள், மற்றும் கிரெம்ளினின் போர் இயந்திரங்களில் இருந்து இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவுள்ளன. 


கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து நூற்றுக்கணக்கான ரஷ்ய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது இங்கிலாந்து அரசாங்கம் ஏற்கனவே தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ரஷ்யாவிற்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் பிரிட்டன் ரஷ்யாவிற்கு எதிராக பிரித்தானியாக பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அரசாங்க அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கு பதிலளிக்கும் வகையில், பொருளாதாரத் தடைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புடினின் தனிப்பட்ட சொத்துக்களை கட்டியெழுப்ப உதவியவர்கள், மற்றும் கிரெம்ளினின் போர் இயந்திரங்களில் இருந்து இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து நூற்றுக்கணக்கான ரஷ்ய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது இங்கிலாந்து அரசாங்கம் ஏற்கனவே தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement