• Mar 26 2025

பிரித்தானியா விதித்துள்ள தடை முற்றிலும் ஒருதலைப்பட்சமானது! - சரத் வீரசேகர காட்டம்

Chithra / Mar 26th 2025, 8:40 am
image

 

பிரித்தானியா விதித்துள்ள தடை முற்றிலும் ஒருதலைபட்சமானது. பிரித்தானியாவின் இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கையின்  பாதுகாப்பு துறையின் முன்னாள்  உயர் அதிகாரிகள் மூவர் உட்பட கருணா அம்மான் என்று அறியப்படும் விநாயகமூர்த்தி  முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

விடுதலை புலிகள் அமைப்பினை இலங்கையில் இல்லாதொழித்தாலும் அந்த அமைப்பின் கொள்கையினை கொண்டவர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இன்றும் செல்வாக்கு செலுத்துகின்றனர். 

விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பிரித்தானியாவில் வாழ்கின்றனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவிடம் பிரித்தானியா பலமுறை எடுத்துரைத்தது.

இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷ மேற்குலக நாடுகளின்  அறிவுறுத்தலுக்கு அடிபணியாமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆணைக்குழு அமைய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இதன் பின்னரே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஊடாக பிரித்தானியா இலங்கைக்கு  எதிராக பல தீர்மானங்களை கொண்டு வந்தது. 

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை கொண்டு செல்லும் செயற்பாடுகள் மறைமுகமாகவே முன்னெடுக்கப்படுகிறது. இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டும் என்றார்.

பிரித்தானியா விதித்துள்ள தடை முற்றிலும் ஒருதலைப்பட்சமானது - சரத் வீரசேகர காட்டம்  பிரித்தானியா விதித்துள்ள தடை முற்றிலும் ஒருதலைபட்சமானது. பிரித்தானியாவின் இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.இலங்கையின்  பாதுகாப்பு துறையின் முன்னாள்  உயர் அதிகாரிகள் மூவர் உட்பட கருணா அம்மான் என்று அறியப்படும் விநாயகமூர்த்தி  முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,விடுதலை புலிகள் அமைப்பினை இலங்கையில் இல்லாதொழித்தாலும் அந்த அமைப்பின் கொள்கையினை கொண்டவர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இன்றும் செல்வாக்கு செலுத்துகின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பிரித்தானியாவில் வாழ்கின்றனர்.விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவிடம் பிரித்தானியா பலமுறை எடுத்துரைத்தது.இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷ மேற்குலக நாடுகளின்  அறிவுறுத்தலுக்கு அடிபணியாமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆணைக்குழு அமைய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.இதன் பின்னரே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஊடாக பிரித்தானியா இலங்கைக்கு  எதிராக பல தீர்மானங்களை கொண்டு வந்தது. சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை கொண்டு செல்லும் செயற்பாடுகள் மறைமுகமாகவே முன்னெடுக்கப்படுகிறது. இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement