• May 18 2024

நாட்டில் இவ் வருட பிற்பகுதியில் கலகம் ஏற்பட வாய்ப்பு- எச்சரிக்கிறது பௌத்த துறவிகளின் சங்கம்..!!

Tamil nila / Mar 31st 2024, 11:11 pm
image

Advertisement

இவ்வருடப் பின்பகுதியில் தேர்தல்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் நிலவும் இவ்வேளையில் வாக்குச் சேகரிப்புக் காரணமாக சில நாசகார சக்திகள் கலகத்தைத் தூண்டிவிடக்கூடும் என சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலக தமிழர் பேரவையினர் எச்சரித்துள்ளனர்

இலங்கையில் அண்மையில் நடந்தவை பற்றிய, சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலக தமிழர் பேரவையின் இணை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் 

மார்ச் 8, 2024 அன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் அனுட்டிக்கப்பட்ட மகாசிவராத்திரி விரத நாளன்று பாதுகாப்பு படையினர் பக்தர்களுக்கு உணவு, நீர் மற்றும் அடிப்படைத் தேவைகள் வழங்கப்படுவதைத் தடுத்ததுமல்லாது கோவில் அர்ச்சகர்கள் உட்பட பக்தர்களை அவமானப்படுத்தும் வகையில் அகற்றித் தடுப்புக்காவலில் வைக்குமளவுக்கு மிக மோசமாக நடந்துகொண்ட சம்பவம் குறித்து (பௌத்த துறவிகளின்) சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியன ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன.

இங்கும் இதர இடங்களிலும் வாழும் மக்களின் பல்நூற்றாண்டுக் கலாச்சாரப் பண்பாடுகளையும் நடைமுறைகளையும் அழித்துவிட்டு பெரும்பான்மையினரின் அடையாளங்களையும் நடைமுறைகளையும் திணிக்கும் அரசின் அகன்ற திட்டம் சிறுபான்மைச் சமூகங்களிடையே அச்சத்தையும் சந்தேகங்களையும் தோற்றுவிக்கிறது என்ற வரலாற்றை நாம் அறிந்துள்ளோம். 

இதைச் சாதிக்க தொல்லியல் திணைக்களம் ஒரு கருவியாகப் பாவிக்கப்படுகின்றது. பல ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் சாமப் பூஜைக்கான அனுமதி வழங்கப்பட்டதா இல்லையா என்ற விடயத்தில் முரண்பாடான தீர்மானங்களை எடுப்பதற்கு நீதிமன்றங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

இங்கு மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் அவமானப்படுத்தும் வகையில் முரட்டுத்தனமாகக் கையாளப்பட்டமையே.

இவ்விடயத்தில் கோவில் இருப்பிடம் சிதைக்கப்பட்டதென்பதற்கு பொலிசார் ஆதாரம் தரமுடியாமையினாலும் அக்கோவிலில் வழிபாடு செய்வதற்கான சட்டரீதியான அங்கீகாரம் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தமையினாலும் கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிபதியினால் விடுதலை செய்யப்பட்டமை ஆறுதல் தருவதாக உள்ளது.

பாதுகாப்பு நிர்வாகத்தினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான தடுத்துவைப்புகள், துன்புறுத்தல்கள் பற்றி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஃபோக்கெர் ரேர்க் அளித்த வாக்குமூலத்திற்கு அமைய அவரது கரிசனைகளை மேற்கூறிய சம்பவம் உறுதிப்படுத்துவதாக உள்ளது. 

இது ஒரு அலுவலகத்தை உருவாக்கப்போகிறோமென்பதுட்பட நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை எடுப்பதாக அரசு காட்டிவரும் முனைப்புக்கு எதிரானதாகவே பார்க்கப்படும்.

இலங்கையில் அனைத்து சமூகங்களின் மத்தியில் மத ஒற்றுமையை முன்னெடுக்க மன்றம் மற்றும் பேரவை எடுத்துவரும் முயற்சிகளை இப்படியான சம்பவங்கள் குலைத்துவிடுமோ என்ற அச்சமும் எங்களுக்குக் கரிசனை தருவதாக உள்ளது.

இவ்வருடப் பின்பகுதியில் தேர்தல்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் நிலவும் இவ்வேளையில் வாக்குச் சேகரிப்புக் காரணமாக சில நாசகார சக்திகள் கலகத்தைத் தூண்டிவிடக்கூடும் என்பதால் எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடைபெறாது தவிர்க்க அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், சட்ட மற்றும் பாதுகாப்பு நிர்வாகங்கள் மிகவும் முன்னெச்சரிக்கையோடு செயற்படவேண்டுமென நாம் கேட்டுக்கொள்கிறோம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.



நாட்டில் இவ் வருட பிற்பகுதியில் கலகம் ஏற்பட வாய்ப்பு- எச்சரிக்கிறது பௌத்த துறவிகளின் சங்கம். இவ்வருடப் பின்பகுதியில் தேர்தல்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் நிலவும் இவ்வேளையில் வாக்குச் சேகரிப்புக் காரணமாக சில நாசகார சக்திகள் கலகத்தைத் தூண்டிவிடக்கூடும் என சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலக தமிழர் பேரவையினர் எச்சரித்துள்ளனர்இலங்கையில் அண்மையில் நடந்தவை பற்றிய, சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலக தமிழர் பேரவையின் இணை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் மார்ச் 8, 2024 அன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் அனுட்டிக்கப்பட்ட மகாசிவராத்திரி விரத நாளன்று பாதுகாப்பு படையினர் பக்தர்களுக்கு உணவு, நீர் மற்றும் அடிப்படைத் தேவைகள் வழங்கப்படுவதைத் தடுத்ததுமல்லாது கோவில் அர்ச்சகர்கள் உட்பட பக்தர்களை அவமானப்படுத்தும் வகையில் அகற்றித் தடுப்புக்காவலில் வைக்குமளவுக்கு மிக மோசமாக நடந்துகொண்ட சம்பவம் குறித்து (பௌத்த துறவிகளின்) சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியன ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன.இங்கும் இதர இடங்களிலும் வாழும் மக்களின் பல்நூற்றாண்டுக் கலாச்சாரப் பண்பாடுகளையும் நடைமுறைகளையும் அழித்துவிட்டு பெரும்பான்மையினரின் அடையாளங்களையும் நடைமுறைகளையும் திணிக்கும் அரசின் அகன்ற திட்டம் சிறுபான்மைச் சமூகங்களிடையே அச்சத்தையும் சந்தேகங்களையும் தோற்றுவிக்கிறது என்ற வரலாற்றை நாம் அறிந்துள்ளோம். இதைச் சாதிக்க தொல்லியல் திணைக்களம் ஒரு கருவியாகப் பாவிக்கப்படுகின்றது. பல ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் சாமப் பூஜைக்கான அனுமதி வழங்கப்பட்டதா இல்லையா என்ற விடயத்தில் முரண்பாடான தீர்மானங்களை எடுப்பதற்கு நீதிமன்றங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.இங்கு மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் அவமானப்படுத்தும் வகையில் முரட்டுத்தனமாகக் கையாளப்பட்டமையே.இவ்விடயத்தில் கோவில் இருப்பிடம் சிதைக்கப்பட்டதென்பதற்கு பொலிசார் ஆதாரம் தரமுடியாமையினாலும் அக்கோவிலில் வழிபாடு செய்வதற்கான சட்டரீதியான அங்கீகாரம் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தமையினாலும் கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிபதியினால் விடுதலை செய்யப்பட்டமை ஆறுதல் தருவதாக உள்ளது.பாதுகாப்பு நிர்வாகத்தினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான தடுத்துவைப்புகள், துன்புறுத்தல்கள் பற்றி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஃபோக்கெர் ரேர்க் அளித்த வாக்குமூலத்திற்கு அமைய அவரது கரிசனைகளை மேற்கூறிய சம்பவம் உறுதிப்படுத்துவதாக உள்ளது. இது ஒரு அலுவலகத்தை உருவாக்கப்போகிறோமென்பதுட்பட நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை எடுப்பதாக அரசு காட்டிவரும் முனைப்புக்கு எதிரானதாகவே பார்க்கப்படும்.இலங்கையில் அனைத்து சமூகங்களின் மத்தியில் மத ஒற்றுமையை முன்னெடுக்க மன்றம் மற்றும் பேரவை எடுத்துவரும் முயற்சிகளை இப்படியான சம்பவங்கள் குலைத்துவிடுமோ என்ற அச்சமும் எங்களுக்குக் கரிசனை தருவதாக உள்ளது.இவ்வருடப் பின்பகுதியில் தேர்தல்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் நிலவும் இவ்வேளையில் வாக்குச் சேகரிப்புக் காரணமாக சில நாசகார சக்திகள் கலகத்தைத் தூண்டிவிடக்கூடும் என்பதால் எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடைபெறாது தவிர்க்க அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், சட்ட மற்றும் பாதுகாப்பு நிர்வாகங்கள் மிகவும் முன்னெச்சரிக்கையோடு செயற்படவேண்டுமென நாம் கேட்டுக்கொள்கிறோம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement