• Nov 26 2024

இரத்தினக்கற்களுடன் தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல முயன்ற வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

Chithra / Jun 1st 2024, 9:56 pm
image

  

80 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களை சட்டவிரோதமான முறையில் தாய்லாந்துக்கு கொண்டு செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (31) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலியை சேர்ந்த  53 வயதான வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பாங்கொக் நகரிற்கு செல்வதற்காக எயார் ஏசியா விமானமான எப்டி-141 இல் செல்வதற்காக நேற்று இரவு 09.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது அவர் கொண்டு வந்த பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மாணிக்கக்கல் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இரத்தினக்கற்களை பறிமுதல் செய்து பத்து இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இரத்தினக்கற்களுடன் தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல முயன்ற வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது   80 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களை சட்டவிரோதமான முறையில் தாய்லாந்துக்கு கொண்டு செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (31) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.காலியை சேர்ந்த  53 வயதான வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.தாய்லாந்தின் பாங்கொக் நகரிற்கு செல்வதற்காக எயார் ஏசியா விமானமான எப்டி-141 இல் செல்வதற்காக நேற்று இரவு 09.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இதன்போது அவர் கொண்டு வந்த பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மாணிக்கக்கல் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன்போது இரத்தினக்கற்களை பறிமுதல் செய்து பத்து இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement