யாழில் அம்பூலன்ஸ் வண்டி மோதியதில் படுகாயமடைந்த வர்த்தகரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த சண்முகதாஸ் தர்மதாஸ் என்ற 54 வயதான வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்.நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்த அவர்,
வர்த்த நிலையத்தை மூடி விட்டு, மோட்டார் சைக்கிளில் தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை, ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் அம்பூலன்ஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானார்.
இந்நிலையில் படுகாயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
அம்பூலன்ஸ் வண்டி மோதி வர்த்தகர் உயிரிழப்பு. யாழில் சம்பவம் யாழில் அம்பூலன்ஸ் வண்டி மோதியதில் படுகாயமடைந்த வர்த்தகரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த சண்முகதாஸ் தர்மதாஸ் என்ற 54 வயதான வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.யாழ்.நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்த அவர், வர்த்த நிலையத்தை மூடி விட்டு, மோட்டார் சைக்கிளில் தனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை, ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் அம்பூலன்ஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானார்.இந்நிலையில் படுகாயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.