• Sep 21 2024

விமான சேவைகள் தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்! samugammedia

Chithra / Aug 1st 2023, 5:47 pm
image

Advertisement

இந்தியாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தோனிசியாவின் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையங்களில் ஸ்ரீலங்கன் விமான நிறுவன விமானங்களுக்கான சேவைகளைப் பெற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தினால் இந்தியாவின் கொச்சி மற்றும் இந்தோனிசியாவின் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையங்களில் விமானப் பயணிகள் மற்றும் நடமாடும் விமான மின்னுயர்த்தி மற்றும் பொருட்களை ஏற்றி இறக்கல்கள் போன்ற பிரிவுகளுக்காக சேவை வழங்குநர்களைத் தெரிவு செய்வதற்கான விலைமுறி கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சேவை வழங்கல் ஒப்பந்தத்தை AI Airport Services Limited இற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தோனேசியாவின் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையத்தில் சேவை வழங்கும் ஒப்பந்தம்PT. Gapura Angkasa நிறுவனத்திற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


விமான சேவைகள் தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம் samugammedia இந்தியாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தோனிசியாவின் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையங்களில் ஸ்ரீலங்கன் விமான நிறுவன விமானங்களுக்கான சேவைகளைப் பெற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தினால் இந்தியாவின் கொச்சி மற்றும் இந்தோனிசியாவின் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையங்களில் விமானப் பயணிகள் மற்றும் நடமாடும் விமான மின்னுயர்த்தி மற்றும் பொருட்களை ஏற்றி இறக்கல்கள் போன்ற பிரிவுகளுக்காக சேவை வழங்குநர்களைத் தெரிவு செய்வதற்கான விலைமுறி கோரப்பட்டுள்ளது.அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சேவை வழங்கல் ஒப்பந்தத்தை AI Airport Services Limited இற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தோனேசியாவின் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையத்தில் சேவை வழங்கும் ஒப்பந்தம்PT. Gapura Angkasa நிறுவனத்திற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement