• Sep 19 2024

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த் திருவிழா நாளை!

Tamil nila / Sep 15th 2024, 8:25 pm
image

Advertisement

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு  நடைபெறவுள்ளது.

காலை 8  மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெறும். தொடர்ந்து  சுவாமி  தேரில் எழுந்தளி உலா வருவார்.

சமுத்திர தீர்த்தத் திருவிழா நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கற்கோவளம் வங்கக் கடலில்  இடம்பெறும். இதற்கான வசந்த மண்டபப் பூஜை மாலை 4 மணிக்கு இடம்பெற்று தீர்த்தமாடுவதற்குச் சுவாமி  5 மணிக்குவங்கக் கடல் நோக்கி புறப்படுவார்.

மறுநாள் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆலய வளாகத்திலுள்ள கேணியில் பட்டுத் தீர்த்தம் நடைபெறும்.

இறுதியாக அன்றைய தினம்  மாலை 5 மணிக்குக் கொடியிறக்கம் இடம்பெறுவதுடன் மஹோற்சவம் நிறைவுறும்.

 தேர், தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு பக்தர்களின் வசதி கருதி விசேட போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஆலய சுற்றாடலிலுள்ள அன்னதான மடங்களில் அன்னதான நிகழ்வுகள் இடம்பெறும்.

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த் திருவிழா நாளை சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு  நடைபெறவுள்ளது.காலை 8  மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெறும். தொடர்ந்து  சுவாமி  தேரில் எழுந்தளி உலா வருவார்.சமுத்திர தீர்த்தத் திருவிழா நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கற்கோவளம் வங்கக் கடலில்  இடம்பெறும். இதற்கான வசந்த மண்டபப் பூஜை மாலை 4 மணிக்கு இடம்பெற்று தீர்த்தமாடுவதற்குச் சுவாமி  5 மணிக்குவங்கக் கடல் நோக்கி புறப்படுவார்.மறுநாள் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆலய வளாகத்திலுள்ள கேணியில் பட்டுத் தீர்த்தம் நடைபெறும்.இறுதியாக அன்றைய தினம்  மாலை 5 மணிக்குக் கொடியிறக்கம் இடம்பெறுவதுடன் மஹோற்சவம் நிறைவுறும். தேர், தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு பக்தர்களின் வசதி கருதி விசேட போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஆலய சுற்றாடலிலுள்ள அன்னதான மடங்களில் அன்னதான நிகழ்வுகள் இடம்பெறும்.

Advertisement

Advertisement

Advertisement