• May 03 2024

கோட்டா நிறுத்திய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..! samugammedia

Chithra / Jul 5th 2023, 12:29 pm
image

Advertisement

இலகு ரயில் போக்குவரத்து திட்டம் (LRT) தொடர்பாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்துடன் மீண்டும் ஒருமுறை முன்மொழியப்பட்ட இலகு ரயில் திட்டத்தை செயற்படுத்தும் வகையில் பொருத்தமான காலக்கெடுவை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் ஜப்பானிய அரசாங்கத்திடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.

ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக தீர்மானித்ததையடுத்து, இலங்கைக்கு 5,978 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயணிகளுக்கு சிறந்த பொது போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோட்டா நிறுத்திய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம். samugammedia இலகு ரயில் போக்குவரத்து திட்டம் (LRT) தொடர்பாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்துடன் மீண்டும் ஒருமுறை முன்மொழியப்பட்ட இலகு ரயில் திட்டத்தை செயற்படுத்தும் வகையில் பொருத்தமான காலக்கெடுவை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் ஜப்பானிய அரசாங்கத்திடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக தீர்மானித்ததையடுத்து, இலங்கைக்கு 5,978 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயணிகளுக்கு சிறந்த பொது போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement