• Sep 20 2024

அரச சொத்துக்களை பாதுகாக்க இராணுவத்திற்கும், பொலிஸிற்கும் அழைப்பு! SamugamMedia

Chithra / Feb 21st 2023, 11:42 am
image

Advertisement

பொரளையில் அமைந்துள்ள அரசாங்க அச்சகத்தின் அரச சொத்துக்களை பாதுகாப்பதற்காக நேற்று பொலிஸாரும் இராணுவமும் அழைக்கப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இராணுவம் அழைக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதன்போது சுமார் 100 வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை, பொரளை பொலிஸாரின் முயற்சியின் கீழ் நேற்று (பிப்ரவரி 20) அரச ஊடகங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக அரச ஊடகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அத்துடன், இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட ஏனைய இடங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

அரச சொத்துக்களை பாதுகாக்க இராணுவத்திற்கும், பொலிஸிற்கும் அழைப்பு SamugamMedia பொரளையில் அமைந்துள்ள அரசாங்க அச்சகத்தின் அரச சொத்துக்களை பாதுகாப்பதற்காக நேற்று பொலிஸாரும் இராணுவமும் அழைக்கப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இராணுவம் அழைக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதன்போது சுமார் 100 வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இதேவேளை, பொரளை பொலிஸாரின் முயற்சியின் கீழ் நேற்று (பிப்ரவரி 20) அரச ஊடகங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக அரச ஊடகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.அத்துடன், இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட ஏனைய இடங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement