• May 20 2024

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யலாம்..!இயந்திர கரங்களை உருவாக்கும் விஞ்ஞானிகள்..!samugammedia

Sharmi / Jun 28th 2023, 11:09 am
image

Advertisement

ஒரே நேரத்தில் பல வேலைகளை விரைவாக செய்து முடிக்கும் வகையில் இயந்திர கரங்களை  உருவாக்கும் புதிய  நடவடிக்கையில் ஜப்பானிய விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

Jizai என்ற ஜப்பானியக் கலையிலிருந்தே இந்த கரங்கள் உதித்துள்ளன.  பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்றவற்றின் வடிவத்தைத் தத்ரூபமாக உருவாக்குவதே இந்த  Jizai கலை.

அந்த வகையில், விரும்பியதைச் செய்யலாம் என்பதும் Jizai என்ற வார்த்தையின் அர்த்தமாக காணப்படுவதால் இந்த இயந்திர கரங்களும் அதனையே நோக்கமாக கொண்டுள்ளன.

டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மசாஹிகோ இனாமியின் குழு இயந்திரக் கைகளை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.

அத்துடன், ஜப்பானியர்களின் பாரம்பரிய பொம்மலாட்டம், யாசுனாரி காவாபாட்டா  என்ற புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளரின் திகில் கதை ஆகியவை கைகளை உருவாக்கத் தூண்டுதலாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தேடல் மற்றும் மீட்புப் பணிகளிலும் இந்த இயந்திர கரங்களை பயன்படுத்த முடியும் என்று  விஞ்ஞானிகள் நம்புகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யலாம்.இயந்திர கரங்களை உருவாக்கும் விஞ்ஞானிகள்.samugammedia ஒரே நேரத்தில் பல வேலைகளை விரைவாக செய்து முடிக்கும் வகையில் இயந்திர கரங்களை  உருவாக்கும் புதிய  நடவடிக்கையில் ஜப்பானிய விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். Jizai என்ற ஜப்பானியக் கலையிலிருந்தே இந்த கரங்கள் உதித்துள்ளன.  பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்றவற்றின் வடிவத்தைத் தத்ரூபமாக உருவாக்குவதே இந்த  Jizai கலை. அந்த வகையில், விரும்பியதைச் செய்யலாம் என்பதும் Jizai என்ற வார்த்தையின் அர்த்தமாக காணப்படுவதால் இந்த இயந்திர கரங்களும் அதனையே நோக்கமாக கொண்டுள்ளன. டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மசாஹிகோ இனாமியின் குழு இயந்திரக் கைகளை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. அத்துடன், ஜப்பானியர்களின் பாரம்பரிய பொம்மலாட்டம், யாசுனாரி காவாபாட்டா  என்ற புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளரின் திகில் கதை ஆகியவை கைகளை உருவாக்கத் தூண்டுதலாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தேடல் மற்றும் மீட்புப் பணிகளிலும் இந்த இயந்திர கரங்களை பயன்படுத்த முடியும் என்று  விஞ்ஞானிகள் நம்புகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement