• May 22 2024

இலங்கையில் விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் - வெளியான அறிவித்தல்! samugammedia

Chithra / Jun 28th 2023, 11:03 am
image

Advertisement

விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

விசேட தேவையுடைய சுமார் 6 இலட்சம் பேரின் உடல் தகுதிக்கு மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்காததால் இதுவரை சாரதி  உரிமம் பெற முடியவில்லை.

எனவே,  வைத்தியர்களின் இந்த உடன்படிக்கையுடன்,  அவர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கையொன்று இம்மாத இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  

விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.  

மேலும், தற்போதைய சட்டத்தின்படி, எந்தவொரு அரசாங்க பதிவு செய்யப்பட்ட வைத்தியரிடமும் உடற்தகுதி சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள போக்குவரத்து ஆணையாளர் நாயகத்துக்கு  அதிகாரம் இருப்பதாகவும், அது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதிக்கு  வழங்கப்படும் எனவும் தலைவர் குறிப்பிட்டார். 

இவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் - வெளியான அறிவித்தல் samugammedia விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.விசேட தேவையுடைய சுமார் 6 இலட்சம் பேரின் உடல் தகுதிக்கு மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்காததால் இதுவரை சாரதி  உரிமம் பெற முடியவில்லை.எனவே,  வைத்தியர்களின் இந்த உடன்படிக்கையுடன்,  அவர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கையொன்று இம்மாத இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.  மேலும், தற்போதைய சட்டத்தின்படி, எந்தவொரு அரசாங்க பதிவு செய்யப்பட்ட வைத்தியரிடமும் உடற்தகுதி சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள போக்குவரத்து ஆணையாளர் நாயகத்துக்கு  அதிகாரம் இருப்பதாகவும், அது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதிக்கு  வழங்கப்படும் எனவும் தலைவர் குறிப்பிட்டார். இவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement