• Apr 27 2024

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஏப்ரல் 07 அல்லது 08ம் திகதி இடம்பெறலாம்? வெளியான தகவல் SamugamMedia

Chithra / Mar 5th 2023, 1:07 pm
image

Advertisement

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு தடையேற்படுத்த வேண்டிய தேவை திறைசேரியின் செயலாளருக்கு கிடையாது.

பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் தேவை ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் உண்டு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் பண்டிகை காலம் என்பதால் தேர்தலை நடத்துவது சிக்கலைத் தோற்றுவிக்கும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடலாம்.

2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.

ஆகவே பண்டிகை காலம் என்பது தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒரு தடையாக அமையாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தேர்தல் இடம்பெறாது என்ற நம்பிக்கையில் ஆளும் தரப்பினர் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடாமல் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்த நிலையில் உள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஏப்ரல் 07 அல்லது 08ம் திகதி இடம்பெறலாம் வெளியான தகவல் SamugamMedia உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தேர்தலுக்கு தடையேற்படுத்த வேண்டிய தேவை திறைசேரியின் செயலாளருக்கு கிடையாது.பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் தேவை ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் உண்டு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.ஏப்ரல் மாதம் பண்டிகை காலம் என்பதால் தேர்தலை நடத்துவது சிக்கலைத் தோற்றுவிக்கும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடலாம்.2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.ஆகவே பண்டிகை காலம் என்பது தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒரு தடையாக அமையாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.தேர்தல் இடம்பெறாது என்ற நம்பிக்கையில் ஆளும் தரப்பினர் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடாமல் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்த நிலையில் உள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement