• May 07 2024

தீவிரவாதத்தால் முதலில் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான்..! - விமல் சுட்டிக்காட்டு

Chithra / Apr 26th 2024, 3:39 pm
image

Advertisement

  

நாட்டில் தீவிரவாதம் உருவாகக் காரணம் ‘மத நம்பிக்கைகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதே’ என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

தீவிரமயமாக்கல் என்பது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாக வன்முறையைப் பயன்படுத்துவதை ஆதரிப்பது அல்லது எளிதாக்குவது உட்பட, தீவிரவாத நம்பிக்கை முறையைப் பின்பற்றும் செயல்முறையாக பொதுவாக வரையறுக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் என்பது அரசியல் அல்லது சித்தாந்த இலக்குகளை அடைவதற்காக பொதுமக்களை இலக்காகக் கொண்ட வன்முறை செயல்முறையாகும்.

அவர்களுக்கு மற்ற பிரிவினரோ, பிற மதத்தினரோ, பிற இனத்தவர்களோ நண்பர்கள் தேவையில்லை. அந்த வகையில் தீவிரவாதிகளாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

அத்துடன் இந்த தீவிரவாத செயல்களால் முதலில் பாதிக்கப்படுவது கத்தோலிக்கர்கள் அல்ல என்றும், முஸ்லிம்கள் மக்கள்தான் என்றும் அவர் சபையில் வலியுறுத்தினார்.

மேலும் முஸ்லிம்களை தாக்குவதைத் தடுக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, புலனாய்வு அமைப்புகளை நடைமுறைப்படுத்தியிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற கொடூரமான படுகொலை நடந்திருக்காது என விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

தீவிரவாதத்தால் முதலில் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான். - விமல் சுட்டிக்காட்டு   நாட்டில் தீவிரவாதம் உருவாகக் காரணம் ‘மத நம்பிக்கைகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதே’ என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்தீவிரமயமாக்கல் என்பது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாக வன்முறையைப் பயன்படுத்துவதை ஆதரிப்பது அல்லது எளிதாக்குவது உட்பட, தீவிரவாத நம்பிக்கை முறையைப் பின்பற்றும் செயல்முறையாக பொதுவாக வரையறுக்கப்படுகிறது.சர்வதேச அளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் என்பது அரசியல் அல்லது சித்தாந்த இலக்குகளை அடைவதற்காக பொதுமக்களை இலக்காகக் கொண்ட வன்முறை செயல்முறையாகும்.அவர்களுக்கு மற்ற பிரிவினரோ, பிற மதத்தினரோ, பிற இனத்தவர்களோ நண்பர்கள் தேவையில்லை. அந்த வகையில் தீவிரவாதிகளாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.அத்துடன் இந்த தீவிரவாத செயல்களால் முதலில் பாதிக்கப்படுவது கத்தோலிக்கர்கள் அல்ல என்றும், முஸ்லிம்கள் மக்கள்தான் என்றும் அவர் சபையில் வலியுறுத்தினார்.மேலும் முஸ்லிம்களை தாக்குவதைத் தடுக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, புலனாய்வு அமைப்புகளை நடைமுறைப்படுத்தியிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற கொடூரமான படுகொலை நடந்திருக்காது என விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement