• May 07 2024

முகமாலை பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களால் பரபரப்பு...! பொலிஸார் எடுத்த நடவடிக்கை...!

Sharmi / Apr 26th 2024, 4:04 pm
image

Advertisement

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது  மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  முகமாலை பகுதியில் நேற்றைய தினம்(25) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து பளை பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் மாவட்ட நீதிமன்ற நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்றையதினம்(25)  காலை சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த மனித எச்சம் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் குறித்த பகுதியை கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும் கிடைக்கப்பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள்  தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டுவருமாறும்,  தற்போது கிடைக்கப்பெற்ற மனித எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்தார்.



முகமாலை பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களால் பரபரப்பு. பொலிஸார் எடுத்த நடவடிக்கை. கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது  மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  முகமாலை பகுதியில் நேற்றைய தினம்(25) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது.இதனையடுத்து பளை பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் மாவட்ட நீதிமன்ற நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்றையதினம்(25)  காலை சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த மனித எச்சம் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் குறித்த பகுதியை கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும் கிடைக்கப்பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள்  தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டுவருமாறும்,  தற்போது கிடைக்கப்பெற்ற மனித எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement