• May 06 2024

நளின் பண்டாரவை தூக்குமேடைக்கு அனுப்பவேண்டும்...! சபையில் சாமர சம்பத் தசநாயக்க ஆவேசம்...!

Sharmi / Apr 26th 2024, 4:11 pm
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார மற்றும் மத்தும பண்டாரவை தூக்குமேடைக்கு அனுப்ப வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்குகளை வழங்குமாறு கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளதானது ஒரு பேயாட்டமான கதை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினரின் மகனே தெஹிவலையில் குண்டினை வெடிக்க வைத்திருந்தார். அவர்தான் குண்டுத் தாக்குதலிலும் இறந்துள்ளார்.

அதேவேளை சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்தார். எல்லோரும் இந்த நாட்டிலே அமைச்சரவையில் இருந்தவர்கள்தான்.

எனவே,  முதலாவது குற்றவாளியாக தூக்குமேடைக்கு அனுப்பப்பட வேண்டியவர் நளின் பண்டாரவே. அதனைத் தொடர்ந்து மத்தும பண்டாரவை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட நளின் பண்டார,

தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, மக்களையும் பாராளுமன்றத்தையும் தவறாக வழிநடாத்திகொண்டு இருக்கின்றார்.

அவரை அங்கொடை வைத்தியசாலையில் சேர்த்து அவரது மூளையினை பரிசோதிக்க நடவடிக்கை எடுங்கள் எனவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மீண்டும் உரையாற்றிய சாமர சம்பத் தசநாயக்க,

நாங்கள் அங்கொடை வைத்தியசாலைக்கு செல்ல தேவையில்லை. 

நீங்கள் அதிகமாக கசிப்பு பயன்படுத்தியதனால் அதாவது டிங்கிரியவிலே கசிப்பு  உற்பத்தி செய்து அதனை பயன்படுத்தி அதன் மூலம் மூளை குழம்பியவராக நீங்கள் தான் அங்கொடைக்கு செல்லவேண்டி வரும்

நீங்கள் அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்த பாராளுமன்ற உறுப்பினரை விற்று தரகு தொழில் செய்பவராக நீங்கள்  இருக்கின்றீர்கள்.

நீங்கள் ஜோக்கருக்குதான் பொருத்தமான ஒருவராக இருக்கின்றீர்கள். நீங்கள் ஜோக்கராக வேண்டாம். நீங்கள் மற்றவர்களை குற்றம் சுமத்த வேண்டாம்.

நீங்களும் உங்களுடைய அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களின் படி முதலாவது குற்றவாளி ரஞ்சித் மத்தும பண்டார இரண்டாவது குற்றவாளி நளின் பண்டார.

இவர்களை தான் கழுவில் ஏற்றி தண்டனை வழங்க வேண்டும்.

எந்த அரசாங்கமோ நீங்கள் கொண்டுவந்திருக்கின்ற எந்த பிரேரணையோ உங்களுடைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விடயம்.

ஆகவே இதற்கு நாங்கள் பொறுப்பு கூறமுடியாது.  இதற்கு மக்கள் பதில் கூறுவார்கள் எனவும் தெரிவித்தார்.


நளின் பண்டாரவை தூக்குமேடைக்கு அனுப்பவேண்டும். சபையில் சாமர சம்பத் தசநாயக்க ஆவேசம். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார மற்றும் மத்தும பண்டாரவை தூக்குமேடைக்கு அனுப்ப வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்குகளை வழங்குமாறு கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளதானது ஒரு பேயாட்டமான கதை.உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினரின் மகனே தெஹிவலையில் குண்டினை வெடிக்க வைத்திருந்தார். அவர்தான் குண்டுத் தாக்குதலிலும் இறந்துள்ளார்.அதேவேளை சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்தார். எல்லோரும் இந்த நாட்டிலே அமைச்சரவையில் இருந்தவர்கள்தான்.எனவே,  முதலாவது குற்றவாளியாக தூக்குமேடைக்கு அனுப்பப்பட வேண்டியவர் நளின் பண்டாரவே. அதனைத் தொடர்ந்து மத்தும பண்டாரவை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.இதன்போது குறுக்கிட்ட நளின் பண்டார,தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, மக்களையும் பாராளுமன்றத்தையும் தவறாக வழிநடாத்திகொண்டு இருக்கின்றார்.அவரை அங்கொடை வைத்தியசாலையில் சேர்த்து அவரது மூளையினை பரிசோதிக்க நடவடிக்கை எடுங்கள் எனவும் தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து மீண்டும் உரையாற்றிய சாமர சம்பத் தசநாயக்க,நாங்கள் அங்கொடை வைத்தியசாலைக்கு செல்ல தேவையில்லை. நீங்கள் அதிகமாக கசிப்பு பயன்படுத்தியதனால் அதாவது டிங்கிரியவிலே கசிப்பு  உற்பத்தி செய்து அதனை பயன்படுத்தி அதன் மூலம் மூளை குழம்பியவராக நீங்கள் தான் அங்கொடைக்கு செல்லவேண்டி வரும்நீங்கள் அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.இந்த பாராளுமன்ற உறுப்பினரை விற்று தரகு தொழில் செய்பவராக நீங்கள்  இருக்கின்றீர்கள்.நீங்கள் ஜோக்கருக்குதான் பொருத்தமான ஒருவராக இருக்கின்றீர்கள். நீங்கள் ஜோக்கராக வேண்டாம். நீங்கள் மற்றவர்களை குற்றம் சுமத்த வேண்டாம்.நீங்களும் உங்களுடைய அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களின் படி முதலாவது குற்றவாளி ரஞ்சித் மத்தும பண்டார இரண்டாவது குற்றவாளி நளின் பண்டார.இவர்களை தான் கழுவில் ஏற்றி தண்டனை வழங்க வேண்டும்.எந்த அரசாங்கமோ நீங்கள் கொண்டுவந்திருக்கின்ற எந்த பிரேரணையோ உங்களுடைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விடயம்.ஆகவே இதற்கு நாங்கள் பொறுப்பு கூறமுடியாது.  இதற்கு மக்கள் பதில் கூறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement