வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று(01) காலை யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.
யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டத்தில், நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரணையே எமக்கு தேவை, பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றியே இறந்துகொண்டிருக்கிறோம், கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட தமிழ், ஆங்கிலம் மொழியிலான பதாதைகளை கையில் ஏந்தி கண்ணீருடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், குரலற்றவர்களின் குரல் அமைப்பினர், அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா - யாழில் தாய்மார்கள் கேள்வி வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று(01) காலை யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டத்தில், நாங்கள் கேட்பது இழப்பீட்டையோ மரணச் சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரணையே எமக்கு தேவை, பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றியே இறந்துகொண்டிருக்கிறோம், கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட தமிழ், ஆங்கிலம் மொழியிலான பதாதைகளை கையில் ஏந்தி கண்ணீருடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த போராட்டத்தில், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், குரலற்றவர்களின் குரல் அமைப்பினர், அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.